எஸ் ஜே சூர்யா என்றதும் முதலில் தயங்கினேன்.! மேடையில் பேசிய பிரியா பவானி சங்கர்.!

0
455
Priya-bhavani

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு பல நடிகர் நடிகைகள் சென்றனர் அந்த வரிசையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். செய்தி வாசிப்பாளராக இருந்த பின்னர் சீரியலில் நடித்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.

தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க :
அஜித்தை வைத்து இயக்க முடியாமல் போன விஜய் பட இயக்குனர்.! கடைசில நடிச்சது யாரு பாருங்க.! 

- Advertisement -

இந்த விழாவின் போது மேடையில் பேசிய பிரியா பவானி சங்கர்,
இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார்.

மேலும், சங்கர் கூறியதுபோல் என்னை படம் முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்று பேசியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

-விளம்பரம்-
Advertisement