“மெர்சல்” பட நடிகருடன் ஜோடி சேரப்போகிறார் ப்ரியா பவானி ஷங்கர் ! யார் தெரியுமா ?

0
2891

செய்தி வாசிப்பாளராக இருந்து பொன்னர் சீரியலில் நடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் தற்போது மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறிவிட்டார். இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது பல படங்களில் கமிட் ஆகி வருகிறார் ப்ரியா.

sj surya

- Advertisement -

கார்த்திக்கின் அடுத்த படமான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். மேலும், மெர்சல் வில்லன் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ப்ரியா.

இந்த படத்தினை ஒருநாள் கூத்து படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்குகிறார். இதனால் ப்ரியாவின் ரசிகர்கள் இந்த படங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.