கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.
ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். பின்னர் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் ஒரு சில முன்னனி நாயகர்களின் படத்தில் நடித்துவிட்டார் நிவேதா தாமஸ்.
ஆனால், இந்த ஆண்டு தனது படிப்பை முடிக்க வேண்டும் என்று எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் நடிகை நிவேதா தாமஸ். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் இனி தங்கை ரோலில் நடிக்க விருப்பம் இல்லைஎன்றும் தற்போதைக்கு கதாநாயகியாக நடிப்பதில் கவனம் செலுத்துவதாக கூறி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் நிவேதா தாமஸ்.