இன்னிக்கி என்ன அழகா கட்ட 10 பேர் வேல செய்றாங்க,ஆனா அன்னிக்கி – 12 ஆண்டு Throwback வீடியோவை பகிர்ந்த பிரியா பவானி.

0
1133
Pbs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பின் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இதனை அடுத்து சமீபத்தில் அருண் விஜய்- ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் யானை.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் திரைப்பயணம்:

இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்: சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தல படத்தில் ப்ரியா நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

பிரியா பவானி சங்கர் பகிர்ந்த வீடியோ :

இதனை அடுத்து இவர் அகிலன், மற்றும் இந்தியன் 2 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் பதிவிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ப்ரியா பவானி சங்கர் தொகுப்பாளராக இருந்த போது கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனனை பேட்டி எடுத்திருக்கிறார். அதை தான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், இந்த வீடியோ பழைய நினைவுகளை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

-விளம்பரம்-

பிரியா பவானி சங்கர் பதிவு :

யார் இதனை வெளியிட்டார்களோ அவர்களுக்கு நன்றி. எனது சுவாரசியமான பயணத்தை உணர முடிகிறது. உங்கள் உடலையும் உங்கள் தோற்றத்தையும் வைத்து சிலர் உங்களை காயப்படுத்துவார்கள். நீங்கள் யார் என்பதையும் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதையும் மற்றவர்களை பேச முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள். இதுதான் அழகு என்ற எந்த வரையறையும் இல்லை. ஸ்கின் கேர், வாழ்க்கை முறை என நடிகர்கள் நிறைய செலவிடுவார்கள்.

அன்றும் இன்றும் :

ஆனால் சாதாரண கல்லூரி மாணவியால் அதெல்லாம் செய்ய முடியாது. அதனால் உங்களிடம் நல்ல தோற்றமும், உடல்வாகும், தோல் நிறமும் இல்லையென்றால் பரவாயில்லை. இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்து முடிவுக்கு வராதீர்கள். இன்று நான் தயாராக எனக்கு 10 பேர் கொண்ட குழு இருக்கிறார்கள். அழகுக்கு இதுதான் வரையறை என்று எதுவும் இல்லை. நிச்சயம் அது இலக்கு இல்லை. அது ஒரு வேலை. அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.

காசு தானா தேடி வராது

காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். காசு தானா தேடி வராது. நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு விரும்புவதை பெற வேண்டும். உங்களுக்கு அது கிடைக்கும்போது அதனை வைத்து நீங்கள் செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள். கலர் ஆகனும் என்று எந்த அவசியமும் இல்லை. ராஜவேல் ஐ லவ் யூ. நீ அப்போது எப்படி பார்த்தாயோ, அப்படியே தான் இப்பொழுதும் பார்க்கிறாய் நன்றி. நீங்கள் இதுபோன்ற நபரை கண்டுபிடித்தால் விட்டுவிடாதீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement