நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு ரஜினியின் படத்தினுடைய தலைப்பு என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.
Meanwhile Dalaivar Rajinikanth From 1984 : Dei Kutta Sunni Suriya, Vandhu En Sunni'ya Pudichu Aatu #Kanguva pic.twitter.com/aanSyvpkO1
— • LøИꫀ Ꮤøꪶf • (@8055Ghost) April 16, 2023
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சூர்யா நடிக்கும் படங்கள்:
பின் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் படம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ஆனால், இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகியதாக அறிவித்து இருக்கிறார். பின் சமீபத்தில் டெல்லியில் நடந்த 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று படத்திற்காக சூர்யா வென்று இருக்கிறார்.
#Kanguva
— மேவி (@mayvee) April 16, 2023
Remake of Rajini's 1984 movie with same name ?#surya42 #Rajinikanth #SiruthaiSiva pic.twitter.com/z5AlODL8YO
சூர்யா 42 படம்:
மொத்தம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம். இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யாவிற்கு அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
தெரிந்துக் கொள்வோம்..!
— Rajini Records (@RajiniRecords) April 16, 2023
Superstar Rajini நடித்த நேரடி ஹிந்தி படம் #Kanguva #1984 மும்பை மெட்ரோ தியேட்டரில் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. தமிழகத்திலும் 75 நாட்கள் ஓடியது#Jailer pic.twitter.com/9kdvYqKnFz
படத்தின் தலைப்பு:
இந்த நிலையில் சூர்யா படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சிவா-சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடித்த இந்தி படத்தின் பெயர் கங்வா (Gangvaa). இந்த படம் தமிழில் வெற்றி பெற்ற மலையூர் மம்முட்டியான் படத்தின் ஹிந்தி ரிமேக். தமிழில் தியாகராஜன் நடித்த வேடத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். தற்போது ரஜினியின் பட தலைப்பை சூர்யா பயன்படுத்தி வருவது குறித்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.