என்னடா பண்ணி வச்சிருக்கீங்க பிரியா பவானி சங்கர. இந்தியன் 2 வில் அவருடைய ரோல் இதானாம்.

0
94892
indain-2

தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் தற்போது சினிமவில் நடிகர், நடிகைகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image result for priya bhavani shankar indian 2"

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : பிக் பாஸில் நடந்தது குறித்து மேடையில் உளறி மாட்டிக்கொண்ட தர்ஷன். இதான் விஷயமா ?

இதுமட்டுமில்லாமல் தற்போது இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன் ‘ திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்மா, விவேக் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for priya bhavani shankar indian 2"

இதில் நடிகர் சித்தார்த் கமலின் மகனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் அப்பா கமலின் மனைவி வேடத்தில் 80 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியன் முதல் பக்கத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கிறாராம்.இதனால் பிரியா பவானி சங்கரின் ரசிகர்கள் ஷாக்கில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement