பிக் பாஸில் நடந்தது குறித்து மேடையில் உளறி மாட்டிக்கொண்ட தர்ஷன். இதான் விஷயமா ?

0
118566
tharshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக திருவிழா போன்று கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன் களை விட வேற லெவல்ல பட்டையை கிளப்பியது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன் தியாகராஜன். இவர் இலங்கையை சேர்ந்தவர். மேலும்,தர்சன் மாடலாக மட்டும் இல்லாமல் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். அதிலும் இவர் போத்தீஸ் விளம்பரம் தூள் என்று சொல்லலாம். அதோடு தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “வேறென்ன வேண்டும்” என்ற படத்தில் தர்சன் நடித்து உள்ளார். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்த எல்லா போட்டிகளிலும் தர்ஷன் நன்றாக விளையாடி வந்தார்.

-விளம்பரம்-
tharshan-kamal

அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும், மக்களும் தர்சன் தான் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் என்றும் கூறி வந்தார்கள். ஆனால்,யாரு கண்ணுபட்டுச்சி என்று தெரியல, என்ன மாயமோ? மந்திரமோ? தெரியல திடீரென்று தர்சனை பிக் பாஸ் போட்டியில்இருந்து எலிமினேட் செய்தார்கள். பின் ரசிகர்கள் இதை ஏற்று கொள்ளாமல் பல சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இன்று வரை தர்சன் வெளியேற்றம் செய்தது குறித்து பல சர்ச்சைகள் உள்ளன. ஆனால்,தர்சன் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் தர்சனுக்கு என்று ஒரு தனி ஆர்மி உள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 3ன் இறுதிப்போட்டியில் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தர்சனுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். அது என்னவென்றால் கமலஹாசன் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தர்சனுக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு. அதுமட்டும் இல்லாமல் தற்போது இணையங்களில் ஒரு புதிய தகவலும் வந்து உள்ளது. அது என்னவென்றால் கமலஹாசன் அவர்கள் மேடையில் இந்த தகவலை அறிவிப்பதற்கு முந்தைய நாளே கமலஹாசன் அவர்கள் தரசனை வீட்டிற்கு வருமாறு சொல்லி இருந்தார்.

Image result for tharshan met kamal"

பின் தர்சன் இடம் கமல் சொன்னதை எல்லாம் கேட்டு மேடையில் நான் பேசும் போது சர்ப்ரைஸ் போல் இருக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் குழு சொன்னதாகக் கமல்ஹாசன் அவர்கள் கூறினார். ஆனால், தர்ஷன் அவர்கள் மேடையில் கமல் சொல்லியதை உளறி விட்டார். பின் தர்சன், மேடையில் “அய்யோ நான் உளறிட்டேன்”என சிரித்துக் கொண்டே சொன்னதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் 50வது படத்தில் தர்சன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்து உள்ளது. மேலும், இது குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை.

-விளம்பரம்-
Advertisement