தோல்விக்கு நான் காரணமா.! நான் மட்டும் வாயை திறந்த.! இயக்குனரை மிரட்டும் ப்ரியா வாரியர்.!

0
827
Priya-Varrier
- Advertisement -

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர் மத்தியில் வரவேற்பை பெறத் தவறியது.

-விளம்பரம்-
Image result for priya varrier omar lulu

இருப்பினும் இந்த திரைப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த பிரியா வாரியர், ஹிந்தியில் ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அந்த டீசரில் ஸ்ரீதேவி புகைபிடிக்கும் போன்ற காட்சிகள் குளியல் அறையில் பிணமாக கிடக்கும் காட்சிகள் என்று இருந்ததால், இந்த படத்தை தடை செய்யக்கோரி ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

- Advertisement -

இந்த சமயத்தில் ஒரு ஆதார் லவ் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பிரியா வாரியர் தான் என்று அந்தப் படத்தின் இயக்குனர் ஓமர் லுலு குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கூறிய அவர், இந்த படம் ஆரம்பத்தில் நன்றாகத்தான் உருவாகி வந்தது ஆனால் பிரியா பிரகாஷ் வாரியர் கொஞ்சம் பிரபலமடைந்தது அவர் மீது அதிக எதிர்பார்ப்பு அதிகமாகவே, அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எனக்கு பல்வேறு அழுத்தங்கள் வந்தது. அதனால்தான் நான் திட்டமிட்டபடி இந்த படத்தை என்னால் எடுத்து முடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பிரியா பிரகாஷ் வாரியார். தான் என்று கூறியிருந்தார் இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்தநிலையில் இயக்குனரின் இந்த குற்றச்சாற்றுக்கு பதிலளித்துள்ளார் பிரியா வாரியர் இது குறித்து அவர் கூறியதாவது, நான் உண்மையை கூறினால் அது ஒரு சிலருக்கு மிகப்பெரிய பிரச்சினை தான் உருவாக்கும். நான் அவர்களைப் போன்று இருக்க விரும்பவில்லை. நான் அமைதியாக இருக்க முக்கியக் காரணமே என்ன நடந்தாலும் கர்ம வினை அவர்களை சும்மா விடாது. அதற்கான நேரமும் மிக தொலைவில் இல்லை. என்று கூறியுள்ளார். தன்னை அறிமுகம் செய்து இயக்குனரே பிரியா வாரியர் இப்படி பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

Advertisement