ஹன்சிகாவை போல இவங்க போனும் ஹேக் ஆகிடுச்சாம்.! இறைவி பட நடிகை கொடுத்த ஷாக்.!

0
784
Pooja

சமீப காலமாக பல்வேறு நடிகர் நடிகர்களின் செல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல நடிகையான ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது.

Iravi

இதற்கு பதிலளித்த ஹன்சிகா, தனது செல் போன் ஹேக் செய்யப்பட்டது என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா தேவரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், உங்களிடம் என் போன் நம்பர் இருந்தால் அதனை பிளாக் செய்து விடுங்கள். இன்று காலை 10 மணிக்கு என்னுடைய செல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சில கேவலமான நபர்கள் என்னுடைய வாட்ஸ் அப்பை பயன்படுத்தி என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி வருகின்றனர். அதனை ஓபன் செய்தால் உங்கள் அணைத்து தகவல்களும் அழிந்து விடும். அதனால் என் நம்பரை தயவு செய்து பிளாக் செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இளம் நடிகையான இவர், தமிழில் மயக்கம் என்ன படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடித்துள்ள ‘அயோக்யா ‘ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement