சிறையில் மர்மமான முறையில் இறந்த தொழிலதிபர் பயோ பிக்கில் சூர்யா ?

0
567
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சூர்யா மற்றும் பாலா கூட்டணி:

தற்போது சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடித்து வரும் படம் :

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தன்னுடைய 42வது படத்தில் இயக்குனர் சிவா இயக்கி வரும் பிரம்மாண்டனாமா படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது 3d கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் 10 மொழிகளில் உருவாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். அதோடு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் படத்திலோ அல்லது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்திலோ நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பிருதிவ்ராஜ் இயக்கும் பயோ பிக் :

இப்படிப்பட்ட நிலையில் தான் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவே தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் பிருத்விராஜ் லூசிஃபர், புரோ டேடி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் தமிழ் சினிமாவிலும் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ராஜன் பிள்ளை என்ற பிரிட்டானியா நிறுவனத்தின் முதல் இந்திய சேர்மன் கதையா பிருத்விராஜ் இயக்க இருப்பதாகவும், அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. ராஜன் பிள்ளை பிஸ்கட் கிங் என அழைக்கப்பட்டார். இவரது வாழ்கை பல திருப்பங்களையும், அதிர்ச்சியான விஷியங்களையும் கொண்டது. அதே போல இவர் மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement