ஆஸ்துமா இப்போ சரி ஆகிடும், கரெக்ட்டா தீபாவளிக்கு மட்டும் வந்துடும் – கேலிக்கு உள்ளான பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

0
347
priyanka
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதுமட்டுமல்லாது அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட்டிலும் கால் தடத்தைபதித்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு தன்னைவிட பல மடங்கு வயதில் சிறியவரான பிரபல பாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இதனால் பலரும் வயதில் சிரியவரை திருமணம் செய்து கொண்டீர்களா என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்து இருந்தனர். ஆனால், அதைப் பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார் பிரியங்கா சோப்ரா.

- Advertisement -

வாடகை தாய் மூலம் குழந்தை :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருந்தார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து பதிவிட்ட அவர், நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்று உள்ளோம் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அதே வேளையில் நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

பிரியங்கா சோப்ரா பிறந்தநாள் :

இப்படி ஒரு நிலையில் பிரியங்கா சோப்ரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அதிலும் கடற்கரையில் வான வெடி வெடித்து தனது மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் பிரியங்கா சோப்ராவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் :

இதற்கு முக்கிய காரணமே கடந்த தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்து காற்றை மாசுபடுத்த வேண்டாம் என்றும் பட்டாசு வெடிப்பதால் விலங்குகள் பறவைகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்றும் உபதேசம் செய்தார். அதுமட்டுமல்லாது தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததாகவும் இதனால் தனக்கு புகை ஒத்துக்காது என்பதால் பட்டாசு வெடிப்பதில்லை என்றும் கூறி இருந்தார் பிரியங்கா சோப்ரா.

தீபாவளிக்கு மட்டும் ஆஸ்துமா வந்துடுமா :

ஆனால், தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியங்காவை கழுவி ஊற்றி வருகின்றன . ஊருக்கு மட்டும் தானா உங்களுக்கு கிடையாதா என்று பிரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்போ இவருக்கு ஆஸ்துமா சரியாகிவிடும் ஆனால், தீபாவளி அன்று மீண்டும் வந்துவிடும் என்று கேலியாக பலர் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement