பிரியங்காவின் செல்ல நாய்க்காக உருவாக்கிய வீடு.! விலை எவ்வளவு தெரியுமா.! ரொம்ப ஓவர் தான்.!

0
820
Priyanka-Chopra
- Advertisement -

இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் சமீபத்தில் தன்னை விட வயதில் குறைந்த நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.

-விளம்பரம்-

பிரியங்கா சோப்ராவை போலவே, அவரது செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் லிஸ்டில் இருக்கிறது.அதுமட்டுமில்லை தனது செல்ல பிராணியாக டயானாவிற்கு இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ‘ diariesofdiana ‘(டைரிஸ் ஆஃப் டயானா) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட ஆரம்பித்துள்ளார் பிரியங்கா. இந்த பக்கத்திற்கு 3.5 ஆயிரம் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்க : திருமணம் முடிந்த சில நாளிலேயே நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு வந்த பிரச்சனை..! 

- Advertisement -

இதற்கிடையே, 35 ஆயிரம் ரூபாயில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட உடை அணிந்த டயானா, சமீபத்தில் பரபரப்பாகச் செய்தியில் அடிபட்டது. இப்போது மீண்டும் செய்திக்குள் வந்திருக்கிறது. தனது, இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

அதில், அவரது செல்லம் டயானா, அழகான டிராவல் பை ஒன்றில் பத்திரமாக உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. ’’டயானாவுக்கான டிராவல் வீட்டை அழகாக வடிவமைத்துக் கொடுத்த, மிமிக்கு நன்றி’’ என்று அதில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பிரியங்கா. டயானாவின் இந்த டிராவல் வீட்டுக்கான செலவு எவ்வளவு தெரியுமா ரூ.1 லட்சமாம்.

-விளம்பரம்-
Advertisement