மருத்துவமனைக்கு வந்த அஜித்தை வீடியோ எடுத்ததால் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போது அங்கே வேலை பார்த்துவந்த பர்ஷானா என்ற பெண் ஒருவர் அஜித்தை கண்ட ஆர்வத்தில் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அஜித்தை வீடியோ எடுத்ததால் சம்மந்தபட்ட அந்த பர்ஷானா மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் அஜித் தரப்பு புகார் அளிக்க அந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செத்தது மருத்துவமனை நிர்வாகம்.
தனது தவறை உணர்ந்த அந்த பெண் அஜித்தை நேரில் சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு பின்னர் தன் வேலையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஓராண்டாக அஜித்தை சந்திக்க அவரது வீட்டு வாசலில் காத்துகொண்டு உள்ளார். ஆனால், வீட்டின் பாதுகாவலர்களே அஜித்தை சந்திக்க அனுமதியை மறுத்துள்ளனர். இதையடுத்து பெஃப்சி யூனியன் மூலம் அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார்.
இதையும் பாருங்க : அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா? னு சொன்னால் – ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த ஷாக்.
அது பலனளிக்க, பர்ஷானாவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டு அவருடனும் பேசியுள்ளார். அவரும் அஜித் உங்களிடம் பேச விரும்பவில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.மேலும் அஜித் வேண்டுமானால் குழந்தையின் கல்வி கட்டணமாக 10 ஆயிரம் கட்டச் சொல்லியுள்ளார்,’ என்று சுரேஷ் சந்திரா கூறியதாகவும் அதனால் தான் மனமுடைந்ததாக கூறியுள்ளார் பர்ஷானா. வேலையை இழந்த பர்ஷானா எவ்வளவோ முயன்றும் தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் வருந்தியுள்ளார். கணவர் டெய்லர், தனக்கு வேலையில்லை, கடன் தொல்லை, குழந்தைக்கான கல்வி கட்டணம் செலுத்த முடியாவில்லை என பல்வேறு மனஉளைச்சலால் மனம் உடைந்த பர்ஷானா, கடந்த ஏப்ரல் 1ம் தேதி, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டும், விஷம் உட்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற பர்ஷானாவின் வழக்கு சென்னை வளசரவாக்கம் போலீசாரால் விசாரிக்கப்பட, அங்கு வந்த அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் இனி உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் உதவப்போவதில்லை என சொல்லிவிட்டதாகவும், 10 ஆயிரம் மட்டுமே தர முடியும் என கறார் காட்டியதாகவும் சொல்லி கண்ணீர்விடும் பர்ஷானா, இதனால் ஆத்திரம் அடைந்து ”நான் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை, இழந்துவிட்ட என் வேலையை மீட்டு தாருங்கள் என்றுதான் கேட்கிறேன்” என ஆவேசமாக பேச, அங்கிருந்து சுரேஷ் சந்திரா கிளம்பி சென்றதாக கூறியுள்ளார்.
இப்படி ஒரு நிலையில் அந்த பெண் அஜித் மனைவி ஷாலினியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், அஜித்திடம் பேசினால் என் பிரச்சனை தீரும் என்று அந்த பெண் கூற, அதற்கு ஷாலினி, உங்களுக்கு வேலை போனதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அவர் (அஜித்) எல்லாம் பேச முடியாது. நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.