குக் வித் கோமாளி 8 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டதை வென்றது தொடர்பாக பிரியங்கா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி 5' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், தயாரிப்பு நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த ஐந்தாவது சீசனில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை ரக்ஷன், மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
குக் வித் கோமாளி 5:
அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதேபோல் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிகா, KPY வினோத் ஆகியோர் இணைந்து இருந்தார்கள்.
View this post on Instagram
டைட்டில் வென்றவர்:
இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புதுப்புது கான்செப்ட் வழங்கி இருந்தார்கள். கடந்த வாரம் முன் செமி பைனல் நடைபெற்றது. அதில் பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், அக்ஷய் கமல் ஆகியோர் களம் இறங்கி மோதி இருந்தார்கள். கடந்த வாரம் இறுதி சுற்று நடைபெற்றது. அதில் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் பட்டதை தொகுப்பாளினி பிரியங்கா பெற்றிருந்தார். இரண்டாவது இடத்தை சுஜிதா பிடித்தார். பலரும் ப்ரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
பிரியங்கா பதிவு:
இந்த நிலையில் டைட்டில் பெற்றதை வென்றது தொடர்பாக தொகுப்பாளனி பிரியங்கா பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், என்னை சுற்றி இருப்பவர்களை எப்போதுமே கஷ்டமாக நான் உணர வைப்பதில்லை. கிச்சன் சூப்பர் ஸ்டாரில் ஒரு சிக்கனை எப்படி சரியாக கையாளனும் என்று தெரியாமல் நான் தோல்வியடைந்தேன். ஆனால், 10 வருடங்களுக்கு பிறகு குக் வித் கோமாளியின் கோப்பை என் கையில் இருக்கிறது. இப்போது எனக்கு பறப்பது, நடப்பது, நீந்துவது என எல்லாத்தையுமே சமைக்க முடியும் என்று தைரியமாக சொல்ல முடியும். சமையலறையில் என் திறமைகளை மெருகேற்ற உதவிய எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி.
View this post on Instagram
பட்டம் வென்றது குறித்து சொன்னது:
எண்ணெய்யின் சத்தம், மசாலா வாசனை என சமையலில் உள்ள சின்ன சின்ன நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். ஆனால், நான் செய்த பெரும்பாலானவற்றை என்னால் சுவைக்க முடியவில்லை. ஒவ்வொரு குக்குக்கும், கோமாளிக்கும் செட்டில் இருந்த நண்பர்களும் தான் இந்த உணவு பலமுறையை ருசித்தார்கள். என்னை ஊக்கப்படுத்தி சிறந்த சமையல்காரர் ஆக மாற்றிய அனைவருக்குமே நன்றி. எனக்கு நான் மட்டுமே போட்டியாளர். என்னுடைய கடின உழைப்பை கற்றுக் கொடுத்த என்னுடைய குடும்பத்திற்கு நன்றி. அம்மா, ரோகித், அபுகா நீங்கள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. குக் வித் கோமாளி என்ற இந்த பயணத்தில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும், ஆதரவைத்தந்தவர்களுக்கும், துணை நின்றவர்களுக்கும், எனக்காக கண்ணீர் விட்டவர்களுக்கும் நன்றி. நான் தினமும் காலையில் எழுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்களை எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன் என்று கூறியிருக்கிறார்.






