தமிழ் சினிமா உலகில் என்றென்றும் காமெடி கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. சோசியல் மீடியா என்றாலே இவருடைய காமெடியும், புகைப்படங்களும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. 24 ஆம் புலிகேசி பட விவகாரத்தில் இவருக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவருக்கு சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் தான் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ – என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
நடிகர்களுடன் வடிவேலுக்கு ஏற்பட்ட பிரச்சனை :
ஆனால், ஷங்கருடன் மட்டுமல்ல நடிகர் வடிவேலுவுக்கு விஜயகாந்த், அஜித், சிங்கமுத்து என்று பல நடிகர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதில் விஜயகாந்த், சிங்க முது உடனான பிரச்சனை குறித்து அனைவருக்கும் தெரியும் ஆனால், அஜித்துடன் அப்படி என்ன பிரச்சனை என்பதை பார்ப்போம். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவர் இயக்கிய முதல் படமான துள்ளாத மனமும் துள்ளும் படம் மாபெரும் சூப்பர் ஹிட் ஆனது.
19 வருடங்கள் அஜித்துடன் No கூட்டணி :
இந்த படத்தை தொடர்ந்து பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா என பல படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில் அஜித்தை வைத்து இவர் ராஜா படத்தை இயக்கி இருந்தார் இதில் வடிவேலுவும் நடித்து இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அஜித்துடன் கடந்த 19 வருடங்களாக வடிவேலு நடிக்கவே இல்லை.
ராஜா படம் :
இந்த பாதின்ப போது அஜித் – வடிவேலுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் தான் அவர்கள் இருவரும் இந்த படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசி இருக்கும் எழில் ‘ வெளியில் எல்லோரும் அப்படித் தான் பேசுகிறார்கள். ஆனால், எனக்கு எதுவும் பெரிய பிரச்சினை மாதிரி தெரியல. இவர்களுக்குள் பெரிய பிரச்சனை, சண்டை நடந்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அஜித்,வடிவேலுக்கு இடையே சின்ன சின்ன மனவருத்தங்கள் இருக்கலாம்.
இயக்குனர் எழில் சொன்ன உண்மை :
ராஜா படத்தின் படப்பிடிப்பின் போதே இவர்களுக்குள் பிரச்சனை மாதிரி சொல்லிக் கொண்டார்கள். நான் அப்ப என்னுடைய படம் முடிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தேன். என்னுடைய கவனம் முழுவதும் ஸ்கிரிப்டில் இருந்ததால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் படம் முடிந்த முடித்த பிறகு தான் இவர்கள் இருவருக்கும் மன வருத்தங்கள் இருக்கிறது என்று தெரிய வந்தது.
ஆனால், என்ன காரணம் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. அதோட எல்லாரும் சொல்லிக்கிற மாதிரி பெரிய சண்டையோ, பிரச்சனை எதுவும் நடக்கவில்லை. அவர்களுக்குள் சின்ன மனஸ்தாபம் இருக்கும். ஆனால், இதை சமூக வலைத்தளங்களில் தான் பெருசாக கொண்டு செல்கிறார்கள் என்று கூறியுள்ளார்.