விஜயகாந்திற்கு தெரியாமல் நடக்கும் விஷயங்கள் – கடும் அதிர்ச்சில் தே.மு.தி.க.,வினர். யார் காரணம் ?

0
1601
- Advertisement -

விஜயகாந்த்க்கு தெரியாமலேயே அவருடைய பெயரில் அறிக்கைகள் வெளியிட்டு வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல் வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறன் மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், விஜயகாந்த் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது தான் படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் படங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் திரையில் அவரது கடைசி படம். அதற்குப்பின், அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவர் தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வார்.

விஜயகாந்த் குறித்த தகவல்:

இவர் செய்த பல உதவிகள் வெளியில் தெரியாமலே போயிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கமே கடனில் மூழ்கியிருந்த போது பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து உள்ளார். இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி, மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

லோக்சபா தேர்தல் குறித்த தகவல் :

மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த், அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் விரும்புகின்றார்கள். ஆனால் அந்த பொறுப்பு எனக்கு வேண்டாம் என்று பிரேமலதா தயங்குறார். இப்படி இருக்கும் நிலையில் லோக்சபா தேர்தல் இன்னும் பத்து மாதங்களில் நடக்க இருக்கின்றது. எனவே கட்சி குறித்த வேலைகள் பரபரப்பாக நடக்கிறது.

விஜயகாந்த் பெயரில் வெளியாகும் அறிக்கைகள் :

இப்படி ஒரு சூழ்நிலையில் விஜயகாந்த் பெயரில் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றது. விஜயகாந்த் பெயரில் வெளியாகும் அறிக்கைகள் எதுவும் கட்சிக்கு சம்பந்தமில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இதை கவனிக்க ஊழியர் ஒருவரை கட்சி அலுவலகத்தில் நியமித்திருக்கிறார்கள். அவருக்கு மாதம் சம்பளம் வழங்கப்படுகிறது. சோசியல் மீடியா வளர்ந்து வரும் இந்த காலத்தில் விஜயகாந்த் கட்சியினர் எடுத்திருக்கும் நடவடிக்கை தே.மு.தி.க. வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement