இப்படியான மேடைகளில் என்னை பேச அழைத்ததே நான் நல்ல படங்களை தான் எடுத்திருக்கிறேன் என்கிற ஒரு தெம்பை எனக்கு கொடுக்கிறது – மாரி செல்வராஜ்

0
1015
- Advertisement -

கல்லூரி மாணவர்களுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் தான் 10 ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து இருந்தார். இவர்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் இருக்கிறார்கள். இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது. மேலும், இந்த படத்தை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது.

பின் இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் திருநெல்வேலி உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தமிழம் என்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை குறித்து கூறியது, நான் இந்த கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இங்கு படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகவும், நேர்மையாகவும் பயன்படுத்தி நல்ல நிலைமைக்கு இன்று வந்திருக்கிறோம்.

-விளம்பரம்-

வாழ்க்கை அனுபவம் குறித்து சொன்னது;

இந்த மேடையில் உள்ள எல்லோரும் நிறைய படித்தவர்கள், மேலானவர்கள். ஆனால், அவர்களை எல்லோருக்கும் தெரியவில்லை. மாரிசெல்வராஜ் எனச் சொன்னதும் எல்லோருக்கும் தெரிகிறது என்றால் நான் கலைவழி இயங்குவதாலும், அறம் சார்ந்து பேசுவதாலும் தான். நான் என்ன ஆகப்போகிறேன், என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் இருந்த என்னையே கலை இந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது. தனிமையைக் கொண்டாடுங்கள். சின்னச் சின்ன துண்டு பேப்பரைக்கூட எடுத்து படிப்பேன். புத்தகம் படிக்கும்போது எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று திட்டுவார்கள். ஆனால் நான் படித்த புத்தகங்கள் தான் என்னை இந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது.

மாரி செல்வராஜ் சொன்ன அறிவுரை:

மனிதர்களோடு பேச வேண்டும். சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். நாம் ஜெயிப்பதும், தோற்பதும் முக்கியமல்ல. நாம் நினைத்த மாதிரி யாரையும் காயப்படுத்தாமல், தொந்தரவு செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படியான மேடைகளில் என்னை பேச அழைத்ததே நான் நல்ல படங்களை தான் எடுத்திருக்கிறேன் என்கிற ஒரு தெம்பை எனக்கு கொடுக்கிறது. அதுவும் மாணவர்களிடம் பேசுவதற்கு அழைத்தாலே சரியான இடத்திற்குத் தான் போய்க் கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம் என்று உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார்.

Advertisement