தமிழ் சினிமா உலகில் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் சினிமா இயக்குனர்கள், நடிகர்களை பற்றி தாறுமாறாக வறுத்து எடுத்திருக்கிறார். தற்போது இவர் பேசிய பேச்சு தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் செல்வராகவன், கௌதம் மேனன் மற்றும் நடிகர் கமலஹாசன், தனுஷ் உள்ளிட்ட பல பேரை பயங்கரமாக விமர்சித்துப் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, ஆந்திரப் பிரதேசத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று உள்ளது. அந்த மாதிரியான ஒரு பவர்ஃபுல், சூப்பரான தயாரிப்பாளர் சங்கம் எங்கும் கிடையாது. அங்கு எந்த நடிகனும், இயக்குனரும் வாலாட்ட முடியாது. அந்த அளவிற்கு சினிமா சங்கங்கள் சரியான முறையில் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் இருக்கிற தயாரிப்பாளர்கள் சங்கங்களை பற்றி சொல்லவே முடியாது.
அந்த அளவிற்கு பல அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். அதுவும் நடிகர்களும், இயக்குனர்களும் ஆடும் ஆட்டத்திற்கு அளவில்லை. அவர்கள் பண்ணும் செயல்களால் தயாரிப்பாளர்கள் அனைவரும் மொட்டை அடிக்க வேண்டியது தான். அதில் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் சினிமா துறையில் பல தயாரிப்பாளர்களை காலி செய்து இருக்கிறார். இவர் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை எல்லாருமே பார்த்திருப்போம். அந்த அளவிற்கு கிராபிக்ஸ். இவர் எவ்வளவோ கோடி பணத்தை அந்த படத்தில் செலவு செய்து அந்த தயாரிப்பாளரை காலி செய்தார். அதுமட்டும் இல்லாமல் பல பேர் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வருவதில் இயக்குனர்களுக்கும்,நடிகர்களுக்கும் பங்கும் உள்ளது. அதிலும் ஒரு சில இயக்குனர்கள் திட்டம் போட்டு சில குடும்பங்களை அழித்து உள்ளார்கள். நான் பொதுவாக அனைத்து இயக்குனர்களையும் குறை சொல்லவில்லை. ஒரு சில இயக்குனர்களை மட்டும் தான் சொல்லுகிறேன்.
தற்போது வரும் கால கட்டங்களில் நம்மள நம்பி பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற இயக்குனர்கள் எல்லாம் குறைவு தான். ஆனால், அந்த காலத்தில் இருந்த இயக்குனர்கள், நடிகர்கள் மாறி இப்போது கிடையாது. இப்ப இருக்கிற இயக்குனர்கள் எல்லாம் ஹீரோ-ஹீரோயின்கள் நல்லா இருந்தால் போதும் தயாரிப்பாளர்கள் எப்படி போனால் என்ன என நினைப்பவர்கள் தான். மேலும், அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பதாலும், ஹீரோக்களுக்கு அதிக செலவு செய்வதால் தான் பட வாய்ப்புகள் அவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிற இயக்குனர்கள் கூட்டம் தான் அதிகமாக உள்ளது. நான் அனைத்து இயக்குனர்களுக்கும் ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எந்த நடிகரும், இயக்குனரும் படத்திற்கு பணம் கொடுக்க மாட்டார்கள். அந்த படம் இந்த அளவிற்கு வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் பணத்தில் தான். அதோடு மக்களுக்கு நல்ல தரமான படங்களை கொடுக்க வேண்டும். அதிலும் நல்ல கருத்துள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் தற்போது குறைந்து விட்டார்கள். ஆனால், தற்போது வரும் படங்கள் எல்லாம் அப்படியா?? இருக்கிறது. முகம் சுளிக்க வைக்கும் வகையிலும், ச்சி என்று சொல்கிற அளவிற்கு தான் படத்தின் தலைப்புகளையும், காட்சிகளை வைக்கிறார்கள்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முதல் பாதிக்கு மேல் படமே பார்க்க முடியாது. படம் முழுவதும் தனுஷ் ஹீரோயினி மடியிலேயே தான் இருந்தார். அதிலும் படத்தில் வசனங்களை விட முத்தக் காட்சிகள் தான். தமிழ் சினிமாவில் கமலஹாசன் தான் இப்படி எல்லாம் செய்திருப்பார் அவருக்கு அடுத்து தற்போது தனுஷ் செய்து கொண்டு வருகிறார். இவர்கள் இரண்டு பேருமே சினிமாவின் பெயரை கெடுக்கிறார்கள் என்று பல விஷயங்களை பேசினார்.