சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ஓடாததற்கு இதான் காரணம் – உண்மையை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

0
1002
rajan
- Advertisement -

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ஓடாததற்கு காரணம் இது தான் என்று தயாரிப்பாளர் கே ராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.

- Advertisement -

ப்ரின்ஸ் படம்:

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ப்ரின்ஸ். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் சத்யராஜ் தன் குடும்பத்துடன் பாண்டிசேரியில் வசித்து வருகிறார். இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். சத்யராஜின் மகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் பள்ளியில் வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார்.

படத்தின் கதை:

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் கதாநாயகி மரியாவை (ஜெசிகா) சிவகார்த்திகேயன் காதலிக்கிறார். பின் இருவரும் காதலிக்க தொடங்கியவுடன் சிவகார்த்திகேயன் தன் தந்தை சத்யராஜ் இடம் காதல் குறித்து கூறுகிறார். ஆனால், தன்னுடைய மகன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தவுடன் சத்யராஜ் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தன்னுடைய காதலி ஜெசிக்காவை சிவகார்த்திகேயன் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பிரின்ஸ் படம் வெற்றி பெறவில்லை.

-விளம்பரம்-

.

தயாரிப்பாளர் கே ராஜன் அளித்த பேட்டி:

இந்நிலையில் பிரின்ஸ் படம் ஓடாததற்கு காரணம் இதுதான் என்று தயாரிப்பாளர் கே ராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பேட்டி ஒன்றில் அவர், ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் ஹீரோக்கள் என்று சொல்கிறோம். தோல்வி என்றால் மட்டும் அவர்கள் காரணம் இல்லை இயக்குனர் என்று சொல்கிறார்கள். படத்திற்கு படம் நடிகர்களுடைய சம்பளம் ஏறிக்கொண்டே செல்கிறது. காரணம் படத்தின் ஹீட். உண்மையை சொல்லப்போனா,ல் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர்கள் தான். தோல்வி அடைந்தாலும் அந்த இயக்குனர்கள் தான் காரணம். சிவகார்த்திகேயன் டான் படம் நல்ல வெற்றி பெற்றது.

பிரின்ஸ் பட தோல்விக்கு காரணம்:

அதேபோல் டாக்டர் படமும் நல்ல விமர்சனத்தை சந்தித்து இருந்தது. ஆனால், பிரின்ஸ் படம் சரியாக ஓடவே இல்லை. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பு குறைந்து விட்டதா? இல்லை இயக்குனர் கதையில் ஏதோ தவறு செய்து விட்டார். அதுதான் உண்மையான காரணம். இயக்குனர், தயாரிப்பாளர் தான் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம். அது மட்டும் இல்லாமல் கதை ஆசிரியரும் காரணம். கருப்பையில் இருந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எவ்வளவு சிரமமோ, அதைவிட சிரமம் ஒரு கதையை உருவாக்குவது. அதனால் இவர்கள் தான் படத்தின் வெற்றிக்கு காரணம். அதற்குப் பிறகுதான் நடிகர்கள், டெக்னீசியன் என்று கூறி இருந்தார்.

Advertisement