27 ஆண்டா வேலை செய்றேன், இத்தனை வருசமா இப்படி பன்றேன் – போலீசிடம் PSBB ஆசிரியர் பரபரப்பு புகார்.

0
4029
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-122-1024x582.jpg

இது தொடர்பான புகைப்படங்களையும் மாணவிகள் பகிர்ந்துள்ளனர். அதே போல மனைவி ஒருவருக்கும் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அதோடு மாணவிகளின் போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார். ஆசிரியருக்கு போட்டோக்களை அனுப்பிய மாணவிகளில் சிலரிடம் `நீ அழகாக இருக்கிறாய்’ என்று கூறியிருக்கிறார்.ஒரு மாணவியிடம் `நீ என்னுடன் படம் பார்க்க வா’ என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : உங்கள ரெண்டு நிமிஷம் சைட் அடிச்சிட்டு தான் நமஸ்காரம் பண்ணேன் – பிரபல vjவிடமே சொன்ன YG. யார் அந்த vjனு பாருங்க.

- Advertisement -

23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் தங்களுக்கு இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ராஜகோபாலனை பணியில் இருந்து நீக்கியது. சென்னை மடிப்பாக்கம் பகுதியிலுள்ள குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபல் வீட்டுக்குச் சென்று அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மடிப்பாக்கத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலிடம் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

-விளம்பரம்-

இந்த விவசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் ராஜகோபாலன் தொடர்ந்து பள்ளியில் தொந்தரவு கொடுத்துள்ளதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதே போல பள்ளியில் 27 ஆண்டுகளாக தான் பள்ளியில் வேலை செய்து வருவதாகவும் தன்னை போல பல கருப்புப் புள்ளிகள் இருப்பதாக மறைமுகமாக கூறிஇருக்கிறார். அதே போல இந்த சர்ச்சை கிளம்பிய போதே தனது செல் போனில் இருந்த ஏரளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள் மட்டும் சாட்டிங் ஹிஸ்டரியை அழித்து இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement