நிற்க போகுதா ஹரி, லட்சுமி கல்யாணம்? – புதுப்புது அர்த்தங்கள் சீரியல் சரியான Twist.

0
114
pudhu
- Advertisement -

புது புது அர்த்தங்கள் சீரியலில் ஹரி-லட்சுமி திருமணம் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் கொடி கட்டி பறந்தது வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்புகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் மக்களின் ஃபேவரட் சீரியல் என்ற லிஸ்டில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடர் இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த தொடர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் தேவயானி, அபிஷேக் சங்கர், வி.ஜே. பார்வதி, நியாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான ‘அக்கபாய் சாசுபாய்’ என்ற மராத்தி மொழி தொடரின் மறு ஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்று வருகிறது.

- Advertisement -

புதுப்புது அர்த்தங்கள் சீரியல்:

அதற்கு காரணம் சீரியலின் கதை அம்சமும், லக்ஷ்மி ரோலில் நடிக்கும் தேவயானியின் நடிப்பும் தான். இதற்கு முன்பு தேவையானி பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக இருந்தது. குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தற்போது இவர் மீண்டும் புது புது அர்த்தங்கள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

தேவையானி நடிப்பு:

லக்ஷ்மி அம்மாவாக பவித்ராவுக்கு மாமியாராக தேவயானி நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் தேவயானி நடிப்பில் தற்போது இந்த சீரியல் டாப் ரேடிங்கில் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் ஆதிராவின் குழந்தைக்கு சந்தோஷ் தான் அப்பா என்ற உண்மை பிரதீபாவிற்கு தெரிய வருகிறது. இதை பிரதீபா, பவித்ராவிடம் சொல்லி விடுகிறார். இதனால் வீட்டில் பூகம்பம் நடக்கிறது. அதன் பிறகு சந்தோஷிற்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கிறார்கள். பின் குழந்தைக்கு அப்பா சந்தோஷ் தான் என்ற உண்மை அனைவருக்குமே தெரிந்து அதிர்ச்சடைகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

ஆனால், இதெல்லாம் பிரதீபாவின் சதி செயல் என்று ஹரி கூறி எல்லோரையும் நம்ப வைக்கிறார். பின் பிரச்சனையில் இருந்து சந்தோஷையும் காப்பாற்றுகிறார் பிரதீபா. ஆனால், இந்த உண்மை தாத்தாவிற்கு தெரிய வருகிறது. அவர் கோபத்துடன் திருமணத்தை நிறுத்தி அனைவருக்கும் உண்மையை சொல்ல நினைக்கிறார். அந்த நேரத்தில்தான் அவர் தவறி விழுந்து அடிபட்டு விடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்விழித்தால் தாத்தா எல்லா உண்மையும் சொல்லிவிடுவார் என்று சந்தோஷ் அவரை மயக்க நிலையில் வைத்திருக்கிறார்.

சீரியலின்Twist :

பின் குழந்தையை தூக்கி தன்னுடைய நண்பரிடம் கொடுக்க சந்தோஷ் நினைக்கிறார். அதை ஹரி தடுத்து விடுகிறார். இதனால் ஹரிக்கும் சந்தோஷ் மீது சந்தேகம் வருகிறது. இந்நிலையில் இனிவரும் எபிசோடுகளில் மயக்க நிலையில் இருக்கும் தாத்தா எழுந்து வந்து உண்மையை சொல்வாரா? ஹரி – லக்ஷ்மி கல்யாணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கப் போவது என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

Advertisement