உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது – வீட்டில் நேர்ந்த சோகம். அட்லீ சோக பதிவு.

0
5283
priyaatlee
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பிகில்”. மேலும்,பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித் தந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் பிகில் படம் ரசிகர்களிடையே வெறித்தனமாகி உள்ளது. இயக்குனர் அட்லீ அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர்.

-விளம்பரம்-
Image

அட்லீ பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் அட்லீ , கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கி பல சீரியல்கள் நடித்தும், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த பிரியாவை காதலித்தார். பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், நடிகை பிரியா சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான்.

- Advertisement -

அதன் பின்னர் நான் மஹான் அல்ல, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியா. ஆனால், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார் பிரியா. இந்த நிலையில் நடிகை பிரியாவின் தாத்தா காலமாகியுள்ளார. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அட்லீ ‘பிரியாவின் தாத்தா இன்று காலமாகிவிட்டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது எனவே எப்போதும் அவரை ப்ரோ என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கு 82 வயதாகிறது.

கடந்த வாரம் கூட நாங்கள் நன்றாக பேசினோம் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்னுடைய நல் விரும்பியாக நண்பனாக என்னை வழிநடத்தினார் அவர் என்னிடம் சகஜமாக பழகுவார். ’மின்னலே’ படத்தில் நாகேஷ் நடித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். நீங்கள் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பம் ஒரு தூணையும் ஒரு நண்பனை இழந்து உள்ளது. உங்களுடைய இடத்தை எங்கள் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார் அட்லீ.

-விளம்பரம்-
Advertisement