“நாங்க அந்த பட்டதை தரல, அவரே அந்த பட்டதை எடுத்துகொண்டார் ” எடப்பாடி பட்டதை விமர்சித்த புகழேந்தி.

0
890
- Advertisement -

ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி தமிழர் என்று பட்டம் வழங்கப்பட்டது. அந்த பட்டதை விமர்சித்து புரட்சி தொண்டன் செய்தி தாள் வெளியிட்டில் பேசிய புகழேந்தி விமர்சித்தார். மறைந்த முன்னாள் ஜெயலலிதாவிற்கு பின் அதிமுக கட்சியை ஒ.பன்னீர் செல்வதை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தனதாக்கி வைத்து கொண்டார். அதற்காக ஒ. பன்னீர் செல்வம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.  

-விளம்பரம்-

தற்போது ஒ.பன்னீர் செல்வம் டி.டி.வி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமி எதிராக பல போராட்டங்களை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். சமீபத்தில் டி.டி.வி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எடப்பாடியின் மாநாட்டை விமர்சித்து இருந்தார். அது 4 வருடங்களில் ஈட்டிய பணத்தை தற்போது மாநாடு நடித்தி வருகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

ஓ.பி.எஸ். கூறுகையில் “மதுரையில் பழனிசாமி நடத்திவருவது மாநாடு இல்லை. பண பலத்தைக் கொண்டு கூட்டப்படும் கூட்டம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்து, அவரின் சாபத்துக்கும் ஆளாகியிருக்கிறார், எடப்பாடி.” என்றும் அவரை விமர்சனம் செய்திருந்தார். அவர்கள் நடத்தும் மாநாடு தமிழகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்து பிரதமர் அருகில் அமரவைத்து மாலை அணிவித்தார்களே என்பதை நினைத்தாலே கவலையாக இருக்கிறது என்றார். இதனை தொடர்ந்து நமது புரட்சி தொண்டன் பத்திரிக்கை வெளியிட்டில் பேசிய புகழேந்தி ”ஒய்.எம்.சி ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது ஒருவர் வந்து என்னை பிடித்துகொண்டு உங்க அரசியல் அதில் நீங்க பண்ணிகொங்க நீங்க சண்டை போட்டுகோங்க எங்களிடம் எதற்கு சண்டைக்கு வரிங்க என்றார் நான் என்னை சண்டை என்று கேட்டேன் அதற்க்கு அவர் நீங்கள் எப்படி புரட்சி தமிழன் என்று சொல்லலாம் என்று கேட்டார்

-விளம்பரம்-

அதற்க்கு நான் சொன்னேன் அதை நங்கள் சொல்லவில்லை அதை அந்த தகரம் (EPS) தான் சொன்னாக நங்கள் எங்க தலைவரை தங்கம்(OPS) என்று தான் கூறுகிறோம். தங்கத்திற்கும் தகரத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்றேன். அந்த நபர் யாரு என்று பார்த்தால் அது சத்யராஜ் ரசிகராம் அது சத்யராஜ் பட்டம் என்று கூறினார். அதற்க்கு நான் கூறினேன் அதற்கு நன் என்ன செய்வது சத்யராஜை கருப்பு சட்டை போட்டுகொண்டு அங்கு சென்று விவாதம் நடத்த சொல்லு அப்போதான் சரியாக இருக்கும் என்றேன்.” என்று அவர் கூறினார்.                

Advertisement