தமிழில் நாட்டுப்புற பாடல்கள் பாடும் கலைஞர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதுவும் சினிமாவில் நாட்டுப்புற பாடல் என்பது அரவே அழிந்துவிட்டது. ஒரு சிலர் மட்டுமே நாட்டுபுற பாடல்களை இன்னும் காப்பாற்றி வருகின்றனர். அந்த ஒரு சில நபர்களில் முக்கியமான பிரபலராக இருப்பவர் நாட்டுப்புற பாடகர் புஸ்பவனம் குப்புசாமி.
இவர் யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த பல பங்களிலும் பாடியுள்ளார். இதுவரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 3000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். மேலும், இவர் மெட்ராஸ் பல்கலை கழகத்தில் பி.எச்.டி பட்டத்தையும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ள குப்புசாமிவிஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளனர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னரே அனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனிதாவும் ஒரு நாட்டுப்புற பாடகி தான்.
குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியர் திருமணத்திற்கு பிறகும் எண்ணெற்ற மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். மேலும் இவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் பல்லவி, மேகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது. மூத்தமகளானா பல்லவிக்கு 23 வயதாகிறது, மேலும், இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளாராம். இதோ அவர்களின் புகைப்படம்