அட பாவமே, ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்த ரஷிதா. ஆனா, அதையும் எப்படி match பண்ணி இருகாங்க பாருங்க. வைரலாகும் வீடியோ.

0
775
rachitha
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமாக போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் பல சீரியல்கள் டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீரியல்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட சேனல் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர், நடிகைகள் தற்போது வேறு வேறு சேனலுக்கு மாறியும் வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியிலிருந்து கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நடிகர்,நடிகை சென்று உள்ளனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-178-1024x468.jpg

தற்போது கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியலாக இது சொல்ல மறந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மார்ச் 7 ஆம் தேதி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலின வேறுபாடுகளை, ஆண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு சமையல் கற்றுக் கொண்டு திருமணம் செய்ய வேண்டும் போன்ற காட்சிகள் எல்லாம் காட்டப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : உனக்கு நடிப்பே வரல, உன் Fansனு சொல்றவங்க எல்லாம் உன் ஹாட் போட்டோ ஷூட்ட பாத்து வந்தவங்க தான் – ரசிகர் கமென்டிற்கு மாளவிகா பதிலடி.

- Advertisement -

ரஷிதா நடிக்கும் புதிய சீரியல் :

திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் என்று பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது. பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is image-26.png

இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக ரக்ஷிதா நடிக்கிறார். தன் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு பல போராட்டங்களை சந்தித்து வாழும் பெண்ணின் கதை. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சத்யா என்ற தொடரில் விஷ்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஷூட்டிங்கில் வழுக்கி விழுந்த ரக்ஷிதா :

தற்போது இவர் கலர்ஸ் தொடரில் நடிக்க இருப்பதால் இவர் சத்யா சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், சத்யா 2 தொடரிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுவது போல் வீடியோ வைரலாகி வருகிறது.இதனை கண்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மழை செட்டில் இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது திடீரென வழுக்கி விழுந்தார்.

சமாளித்துள்ள சீரியல் குழு :

ஆனால், அவர் வழுக்கி விழுந்தாலும் அதை அப்படியே ஷூட்டிங் செய்து சமாளித்து இருக்கிறது சீரியல் குழு. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிலர் இதனை ஷூட்டிங் என கூறி வரும் நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்த காட்சி சீரியலில் வருமா இல்லயா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement