விஷால், கார்த்தி, கமல் எல்லாம் பிச்சை எடுப்பவர்கள்- பிரபல நாயகி!, ஏன் என்ன ஆனது?

0
1645
Vishal Karthi

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மலேசியாவில் ஒன்று கூடியுள்ளது. அங்கு ஒரு மிகப்பெரிய கலை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Rajiniஇந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், முன்னாள் நடிகர் சங்க தலைவர் சர்த்தகுமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு அழைப்பு விடப்படவில்லை என கூறப்படுகிறது.

- Advertisement -

80களில் புகழ்பெற்று விளங்கிய ஹீரோயின் ராதிகா. இது குறித்து நீங்கள் ஏன் மலேசியக்கலை விழாவிற்கு போகவில்லை என ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கேட்டார். அதற்கு பதில் அளித்த ராதிகா, எங்களை அவர்கள் அழைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

Radhikaஇதனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், ஹலோ பிச்சை எடுப்பவர்களே, குஷ்பூ, ஹாசினி, விஷால், கார்த்தி, அங்கு சென்று விஷால் வாழ்க எனக் கூற உங்களுக்கு டிக்கெட் கிடைத்திருக்கலாம். ஆனால், துறையில் ஒரு மிகச்சிறந்த நடிகையை ஏன் அழைக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

-விளம்பரம்-

இந்த கேள்வியை ரீட்வீட் செய்த ராதிகா ‘நன்றிகள், பரவாயில்லை’ எனக் கூறி இருந்தார்.

இதையும் படிக்கலாமே:
சூரியா (TSK) படத்துக்கு இலவச விளம்பரம் – கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி

இதனால், அந்த குறிப்பிட்ட நடிகர்களை உண்மையாகவே விஷாலிடம் பிச்சை எடுப்பவர்கள் என மறைமுகமாக கூறுகிறாரா ராதிகா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement