இத விட நான் மோசமா பேசுவ. சீமானை மீண்டும் கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்.

0
4215
Seeman-Lawrance
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் நடன இயக்குனராக இருந்து வருபவர் லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய லாரன்ஸ், சிறுவயதில் கமல் படத்தின் போஸ்டரில் சாணி அடித்துள்ளேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சீமான் எதிர்த்துப் பேசி வருவது நாட்டுக்கு நல்லது இல்லை என்று சீமான் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார் லாரன்ஸ். லாரன்ஸ் இந்தப் பேச்சால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் லாரன்ஸ் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்கள்.

-விளம்பரம்-
நாங்களும் தமிழ்த் தாய் பிள்ளைகள்

- Advertisement -

கடந்த சில தினங்களாகவே லாரன்ஸ் மற்றும் சீமான் தரப்பினர் இருவருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் பங்கு பெற்றிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய லாரன்ஸ் மீண்டும் சீமானை தாக்கி பேசி இருந்தார் அதில் நாம் மட்டும் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளை என்று பேசுகிறார் அப்படியானால் நாங்கள் என்ன அமெரிக்கா தாயும் பிள்ளைகளும் தமிழ் தாயின் பிள்ளைகள் தானே என்று பேசியிருந்தார்.

அதே போல அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் நான் மட்டும் தான் அரசியலில் இருப்பேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். அரசியலிலும் ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் ஓடி தான் வெற்றி பெறுவார்கள். அதுதான் ஆம்பல. ஆனால் தான் மட்டுமே ஓடி வெற்றி பெறுவேன் என நினைப்பவர்களே என்ன சொல்வது. நான் விமர்சிப்பவர் பெயரை சொல்ல தைரியம் இல்லை என்று கேலிசெய்கிறார்கள். அவர் பெயரை சொன்னால் தான் ஆம்பளை என்று சொன்னாங்க. ஆனால் அவர்கள் பெயரைச் சொல்லித்தான் நான் ஆம்பளை என்று நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

-விளம்பரம்-
Image result for லாரன்ஸ் சீமான்

உங்களை விட நான் நன்றாக பேசுவேன் நான் ராயபுரத்தில் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் என்னால் பேசமுடியும் என்று லாரன்ஸ் பேசியிருக்கிறார். லாரன்ஸ் பேசிக்கொண்டிருக்கும்போது சீமான் அண்ணா என்ற பெயரை குறிப்பிட்டு பேச முயற்சித்தார் ஆனால் சீமான் பெயரை கூறக் கூடாது என்று கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் கூச்சலிட உடனே சுதாரித்து லாரன்ஸ் நான் அவர் பெயரை சொல்லவே இல்லை விடுங்க என்று கூறினார். லாரன்ஸின் இந்த பேசினார் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் மீண்டும் லாரன்ஸ் மீது கடுப்பில் இருந்து வருகிறார்கள்

Advertisement