வாய்ப்பு தேடி வந்தும் லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்துள்ள லாரன்ஸ் – அவரே சொன்ன காரணம்

0
646
- Advertisement -

லோகேஷ் கனகராஜின் பட வாய்ப்பை நிராகரித்ததற்கு காரணம் இதுதான் என்று ராகவா லாரன்ஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள்:

தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

- Advertisement -

ருத்ரன் படம்:

இவருடன் இந்த படத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் எழுதி இருக்கிறார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை 5 ஸ்டார் தயாரிப்பாளர் கதிரேசன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

விக்ரம் படம்:

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் லோகேஷ் பட வாய்ப்பு தவிர்த்ததற்கான காரணம் குறித்து ராகவா லாரன்ஸ் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் அளித்த பேட்டி:

இவரை அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் நடிக்க இருந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இது குறித்து ராகவா லாரன்ஸ், நான் தான் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். ஆனால், கால் சீட் காரணமாக என்னால் நடிக்க முடியாமல் போனது. தற்போது நான் மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க போகிறேன். அந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement