இனிமே என் படத்தோட எந்த விழாவிற்கும் வராதீங்க – மேடையிலலேயே திடீரென்று அறிவித்த லாரன்ஸ்

0
2456
- Advertisement -

நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் கூறி இருக்கும் அறிக்கை ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் இவருடன் ராதிகா, மகிமா,கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

ஜிகர்தண்டா படம்:

இதனை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படம் வெளியாகியிருந்தது. அந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமிமேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்து இருக்கிறது.

ஜிகர்தண்டா 2 படம்:

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு கூறியிருப்பது, ஜிகர்தண்டா முதல் பாகத்திலேயே கார்த்திக் சுப்புராஜ் என்னை சந்தித்து சேது கதாபாத்திரம் செய்வது குறித்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் அளித்த பேட்டி:

ஆனால், அந்த சமயத்தில் நான் தெலுங்கு படம் ஒன்றில் பிஸியாக நடித்திருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. பின் நான் அந்த படத்தை திரையரங்கில் பார்த்தபோது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அந்த படத்தை மிஸ் செய்து விட்டேனே என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்தேன். அதோடு நான் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதில்லை. யாருக்கும் பொறுப்பு கொடுப்பதில்லை. ரசிகர் மன்றங்களை நான் ஊக்குவிப்பதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் என் மீது இருக்கிறது. உங்களுக்கு நான் பொறுப்பு கொடுக்க மாட்டேன். உங்களை நிகழ்ச்சிக்கும் அழைக்க மாட்டேன்.

ரசிகர்களுக்கு கொடுத்த அறிக்கை;

உங்களுடைய நேரத்தை நான் எடுத்து வீணடிக்க மாட்டேன். உங்களுடைய கைதட்டல் எந்த நிகழ்ச்சிகளுக்கும் தேவையில்லை. எந்த இசை வெளியீட்டு விழாவிற்கும் நீங்கள் வர வேண்டாம். நீங்கள் உங்களுடைய இடத்தில் இருந்து இங்கு வருவதால் எவ்வளவு செலவாகும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு ரசிகனாக இருந்து நான் இந்த இடத்திற்கு வந்தேன். அதனால் அந்த நேரம்,பணத்தையும் உங்கள் அம்மா அப்பாவிற்கு செலவு செய்யுங்கள். நீங்கள் எங்களின் படங்களை பார்ப்பதே எங்களுக்கு செய்யும் பெரிய உதவி. நீங்கள் இதைக் கேட்டு வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. நான் உங்களை பயன்படுத்திக் கொள்ள மாட்டேன். நீங்கள் வீட்டில் இருந்து அண்ணனின் படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே எனக்கு போதுமானது என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

Advertisement