விவாகரத்து, ஒதுங்கி இருக்கும் குழந்தைகள்,இரண்டாம் மனைவியின் மகள் கொடுத்த ஆறுதல் – இமான் உருக்கம்.

0
3272
- Advertisement -

இசையமைப்பாளர் இமான், கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்கள் உள்ளார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் கூட தனது மகள் Blessicaவின் பிறந்தநாளின் போது தன் மகளின் புகைப்படம் ஒன்றை இமான் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

2020 ஆம் ஆண்டே விவாகரத்து :

அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து இமான் கூறி இருப்பது, என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

- Advertisement -

அவர் கூறியது:

எனக்கு 2008 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனது திருமணமான அடுத்த ஆண்டு என்னுடைய அம்மா இறந்து விட்டார். அதன் பின் என்னுடைய அப்பா யார் என்னை பார்த்துக்கொண்டார். என் முதல் திருமணத்தை எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்னுடைய உயிர் உள்ளவரை அவர்கள் நினைத்து உள்ள பாசம் சற்று குறையாது. என்னுடைய விவாகரத்துக்கு பிறகு நான் மிகவும் மன அழுத்தத்தில் சென்று என்னால் தடை கூட செய்ய முடியவில்லை. அப்போது என்னுடைய வாழ்க்கையில் இசையும் ஆன்மீகமும் இல்லாமல் இரண்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த நேரத்திலே மணி என்னுடைய இரங்கல் குரல் வந்திருக்கும். நான் என்னை நினைத்து பெருமைப்படுகிற விஷயம் என்னவென்றால் மது அருந்தியது கிடையாது.

புகை பிடித்தது கிடையாது. எந்தப் பெண்ணின் பின்னாடியும் சென்றது கிடையாது. இந்த பெண்களிடம் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டது கிடையாது. சில பெண்கள் என்னிடம் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. அதுபோன்று ஆபாச சேட்டிங் செய்யுங்கள் என்று கூறி வந்தனர். எனக்கு இசையை விட்டால் குடும்பம் தான். எட்டு மணிக்கு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று குழந்தைகளிடம் பேசமாட்டோமா விளையாட மாட்டோமா ? என்றுதான் எனக்கு தோன்றும். அதுபோல தான் என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

-விளம்பரம்-

திடீரென்று ஒரு நாள் அவர்கள் யாரும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அந்த வலியையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார். யாரும் விரும்பி விவாகரத்து ஏற்றுக் கொள்வதில்லை. முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் அப்பாவை பற்றி தெரியும் அதன் பின் அவர்கள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக அப்பா என்ற வார்த்தையை கேட்கவே இல்லை. ஆனால் அமலயின் குழந்தை என்னை அப்பா அப்பா என்று 1000 முறை அழைக்கிறாள். அது பதக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது.

Advertisement