விஸ்வரூபம் நடிகருக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை.! விடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.!

0
2937
Visvarubam

உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் இந்தி நடிகர் ராகுல்போஸ் . இந்தியில் பிரபல நடிகரான இவர், இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பல்வேறு அடையாளங்களை கொண்டுள்ளவர்.

சமீபத்தில் நடிகர் ராகுல், சந்தீகருக்கு ஒரு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அப்போது அங்கே இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு உடற்பயிற்சி முடித்துவிட்டு வாழைப்பழம் வேண்டும் என்றுஆர்டர் செய்துள்ளார். ஆனால், வாழைப்பழத்துடன் வந்த பில் இவருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

இதையும் பாருங்க : இத்தனை நியாயம் பேசும் மீரா ஆணுடன் ஆடிய படு மோசமான ஆட்டத்தை பார்த்தா, நீங்களே? 

- Advertisement -

நான் சந்தீரில் ஒரு ஜேடபிள்யூ மாரியட் என்கிற ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். அதற்கான ரசீதைப் பாருங்கள்” என்று ரசீதைக் காட்டுகிறார். அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று போடப்பட்டுள்ளது.

“இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை” என்று பேசியுள்ளார். இவரின் இந்த விடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போய் ‘என்ன இரண்டு வாழைப்பழம் 442 ரூபாயா’ என்று ஷாக்காகி உள்ளனர். ஒரு சிலரோ நீங்கள் ஏன் இவ்வாறான 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement