‘ஜிம் பாடியாக இருக்கும் என்னை உடல் வடிவமே இல்லாத ஹீரோ அடிப்பது தான்’ – வேதாளம் பட வில்லன் பேச்சால் எழுந்த சர்ச்சை.

0
614
Ajith
- Advertisement -

மூளையை கழட்டி வைத்துவிட்டு தான் தென்னிந்திய சினிமா படங்களில் நடிக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரகுல் தேவ். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக 2000 ஆம் ஆண்டில் வெளியான சாம்பியன் என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் தான் திரையுரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி போன்ற பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த நரசிம்மா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி, அஜித்தின் வேதாளம் போன்ற பல படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தி லெஜன்ட்.

- Advertisement -

ராகுல் தேவ் திரைப்பயணம்:

இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். ஹீரோவாக சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது.

ராகுல் தேவ் கூறிய சர்ச்சை கருத்து:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தில் ராகுல் தேவ் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ராகுல் தேவ் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நான் படித்த குடும்ப பின்னணியில் இருந்து வந்திருக்கிறேன். தென்னிந்திய சினிமா படங்களில் நடிக்கும் போது நான் என்னுடைய மூளை மற்றும் அறிவை வீட்டில் கழட்டி வைத்து விட்டு தான் நடிக்கிறேன்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா குறித்து சொன்னது:

காரணம், தென்னிந்திய சினிமா இன்னும் பழைய டெம்பளேட்டுகளை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் இரண்டு பேர் சண்டை போடும்போது யாராவது ஒருவர் சட்டையை கழட்டி உடலை காட்டுவார்கள். இது தான் தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது. ஜிம் பாடியாக இருக்கும் என்னை உடல் வடிவமே இல்லாத ஹீரோ அடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் காண்பிக்கிறார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் நான் படங்களில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இவர் இப்படி கூறியதற்கு காரணம் வேதாளம் படம் என்று தான் பலரும் கூறுகிறார்கள். ஏன்னா, வேதாளம் படத்தில் ராகுல்தேவ், அஜித் இடம் அடி வாங்கி இருப்பார். அதில் அஜித் புரட்டிப்போட்டு எடுத்திருப்பார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இவர் பேசுகிறார் என்று எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணெய் ஊற்றி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் ராகுல் தேவ் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement