விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி சீரியல்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் சின்னையா மற்றும் செம்பா கதாபாத்திரம் விரைவில் கணவன் மனைவியாக வரப் போகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் விஜய் டிவியை நிச்சயதார்த்தத்தை கூட நடத்தி வைத்தது.
இவர்கள் இருவர் திருமணம் எப்போது என்று தெரியவில்லை என்றாலும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மானசா காதலர் சஞ்சீவிக்கு ஒரு விசித்திரமான நோய் இருக்கிறது. அந்த நோயின் பெயர் `அல்டோஃபோபியா’.
இதையும் படியுங்க : உள்ளாடை தெரியும்படி மஞ்சிமா கொடுத்த போஸ்.! இவங்களும் இப்படி மாறிட்டாங்களே.!
இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள சஞ்சீவ், இந்த நோயினால் சஞ்சீவ் பட்ட கஷ்டங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் “படியேறி வீட்டு மொட்டை மாடிக்குப் போறதுக்கே பயப்படுவேன். ஃப்ரெண்ட்ஸ் கிண்டல், கேலி பேசுவாங்க. வளர்ந்த பிறகு இந்தப் பிரச்னை சரியாகிடும்னு நம்பினேன். ஆனா அதிகமாச்சே தவிர, சரியாகலை. இதனால லிஃப்ட், எஸ்கலேட்டர்ல போகப் பயப்படுவேன்.
சம்மர்ல ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான மலைப்பிரதேசங்களுக்கு டூர் போறதுன்னாலும் பயம். சினிமாவுக்கு முயற்சி செய்தப்ப, இது ஒரு பெரிய பிரச்னையா வந்து நின்னுச்சு.யார்கிட்டப் போய் இதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கணும்’கிற மாதிரி பல கேள்விகள் வந்து போனதே தவிர, நான் எந்த முயற்சியும் பண்ணாததால தீர்வு கிடைச்சபாடில்லை.இயக்குனர் கிட்ட எனக்கு இந்த மாதிரியொரு பிரச்னை இருக்கு’ன்னு சொல்லவும் தயக்கம்; மறைக்கவும் பயம். சினிமாவுல இருந்தப்ப கூட இந்தச் சிக்கலை கடந்து வந்துட்டேன்”.