‘மயக்கம் என்ன’ படத்திலேயே கணித்துள்ள செல்வராகவன், ரசிகர் செய்த ட்வீட் – உண்மையாவே இவர் ஜீனியஸ் தாங்க.

0
439
Selvaragahavan
- Advertisement -

அன்றே தலைவன் செல்வராகவன் கனித்தார் என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருகிறேன் என்ற படம் வெளியாகி இருக்கிறது .

- Advertisement -

செல்வராகவன் திரைப்பயணம்:

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். . அதோடு செல்வராகவன் படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் அவர்கள் பகாசுரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் செல்வராகவன் குறித்து ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மயக்கம் என்ன படம்:

அதாவது, செல்வராகவன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் மயக்கம் என்ன. இந்த படத்தில் தனுஷ், ரிச்சா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார் மற்றும் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. இந்த படத்தில் புகைப்பட ஆர்வலராக தனுஷ் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

விருது வாங்கிய கலைஞர்:

இவர் மூத்த புகைப்பட கலைஞர் ஒருவரால் பாதிக்கப்பட்டு கடைசியில் புகழ் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருதினை தனுஷ் வாங்கி இருப்பார். இதற்கு காரணம் இவருடைய மனைவி யாமினி தான். இதனாலே ரசிகர்கள் பலரும் யாமினி மாதிரி மனைவி வரவேண்டும் என்று அந்த நேரத்தில் எல்லாம் பயங்கரமாக சோசியல் மீடியாவில் வைரலாக்கி இருந்தார்கள். மேலும், படத்தில் தனுஷின் பெயர் கார்த்திக். இந்த நிலையில் தனுஷ்ஷின் இதே பெயரில் தற்போது நேஷனல் ஜியோகிராபி ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதினை சென்னையை சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியர் வென்றிருக்கிறார்.

ரசிகர் டீவ்ட்:

இவருக்கு பலருமே பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். இதை ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் செல்வராகவனை டேக் செய்து, ‘தலைவன் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தில் ஹீரோவிற்கு இந்த பெயரை வைத்திருப்பார்’ என்று நெருப்பு இமோஜிகளும், கைகூப்பி வணங்கும் இமேஜ்களும் இருந்தது. இதை பார்த்த செல்வராகவன் லைக்ஸ் செய்து இருக்கிறார்.

Advertisement