விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.
மானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் இருவரும் ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து திருமணம் முடிக்கவுள்ளார்.
இதையும் படியுங்க : சஞ்சீவ், மானஸா காதல், முதலில் காதலை சொன்னது யார்..!அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!
சஞ்சீவ் மற்றும் மானஸா இருவரும் சமீபத்தில் நியூஇயருக்கு வெளியூர் சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பிறகு சஞ்சீவ் இன்ஸ்டா பக்கத்தில் எந்த பதிவும் போடாமல் இருந்தார்.
இந்நிலையில், சஞ்சீவ் திடீர் என, ஒரு ட்விட் போட்டு அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளர். இதில் எல்லோருக்கும் வணக்கம், எந்த ஒரு பதிவும் இல்லாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போடமுடியவில்லை. கவலை வேண்டாம் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் என பதிவிட்டுள்ளார். இந்த செய்தியால் சஞ்சீவின் ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும், சாஞ்ஜீவின் காதலி மானஸாவும் சோகத்தில் இருக்கிறாராம்.