சொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.! நிட்சயதார்த்த புகைப்படம் இதோ.!

0
1449
Raja-Rani

சின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் இரண்டு ஜோடிகள் நிஜத்திலும் காதலர்களாக இருந்து வருகின்றனர்.

Image result for raja rani serial vaishali

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான ஒரு தொடராகும். இந்த தொடரில் வரும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து வருகின்றனர். இதே தொடரில் கதாநாயகனுக்கு தங்கையாக நடிக்கும் வைஷாலியும் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கபட்டு வந்தது.

- Advertisement -

அதே போல கடந்த சில மாதத்திற்கு முன்னர் நடிகை வைஷாலி, தான் சத்யதேவ் என்னும் தனது நீண்டகால நண்பரை வைஷாலி காதலித்து வருவதாக தெரிவித்திருந்தார். இவர்களது காதலை இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என்று ஆசைபட்டு வந்தார் வைஷாலி.

இந்தநிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும்
இவர்களுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்து வைஷாலிக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement