எப்படி இருக்கிறது சசி குமாரின் ‘ராஜ வம்சம்’ – முழு விமர்சனம் இதோ.

0
1116
Rajavamsam
- Advertisement -

இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ராஜவம்சம். இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

அழகான ஒரு கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தவர் சசிகுமார். இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அங்கு சசிகுமாருக்கு மிகப்பெரிய பிராஜக்ட் ஒன்று கொடுக்கப்படுகிறது. அந்த ப்ராஜெக்ட்டை தன்னுடைய கனவு, லட்சியமாக சசிகுமார் நினைக்கிறார். பின் தன்னுடைய வேலையில் கவனத்துடனும் ஆர்வத்துடனும் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சசிகுமார் திருமணமா? இல்லை கனவு பிராஜக்ட்டா என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த கஷ்டமான சூழ்நிலையில் சசிகுமார் என்ன முடிவு எடுக்கிறார்? அதனால் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம்போல் சசிகுமார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என எல்லா காட்சிகளையும் அருமையாக செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அழகாக வந்தாலும் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், உணர்ச்சிவசப்படும் அளவிற்கு சில காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தில் யோகிபாபு, சிங்கம்புலி, சதீஷ் ஆகியோரின் நகைச்சுவைகள் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. ஐஐடி சம்பந்தப்பட்ட கதை, விவசாயம், குடும்பம் என்று கமர்சியல் கலந்த கதையாக இயக்குனர் இயக்கி இருக்கிறார்.

நடிகர்கள் எல்லோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து இறக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. அதோடு கிராமத்து அழகை மாறாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த். மேலும், குடும்பமாக சென்று பார்க்கும் படமாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது. வழக்கம் போல் குடும்பம், உறவு, காதல், வேலை என்ற கான்செப்ட்டையே இயக்குனர் இயக்கி இருக்கிறார். அதில் கொஞ்சம் அழுத்தமும் ஆழமும் இருந்திருந்தால் கதை இன்னும் விறுவிறுப்பாக சென்றிருக்கும்.

பிளஸ்:

படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.

கதிர்வேல் உடைய இயக்கம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் என்று சொல்லலாம்.

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

மைனஸ்:

படம் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை சுற்றியே செல்வதால் இளைஞர்களை பெரிதும் கவரவில்லை.

ஐடி கம்பெனி காட்சிகள் பெரிதாக சொல்லப்படவில்லை.

இன்னும் கதைக்களத்தில் மாற்றங்களும் அழுத்தமும் இருந்திருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும்

நடிகர் சசிகுமார் உடைய ராஜவம்சம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாக ராஜவம்சம் இருக்கிறது.

மொத்தத்தில் ராஜவம்சம் — ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் ஆக இடம் பிடித்துவிட்டார்.

Advertisement