நடிகர் சிவகார்த்திகேயன் “எஸ் எம் எஸ் ,ஓகே ஓகே,வி எஸ் ஓ பி” போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்திலும் தற்போது நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாகி நடிக்கவிருக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்து ராஜேஷ் பேசுகையில், இந்தக் கதையை சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதற்கு நயன்தாராதான் காரணம். ஏனென்றால் கதாநாயகி கதாபாத்திரம்வலுவானது . அந்த ரோலில் நடிப்பவரைப் பொறுத்துதான் படமே இருக்கு என்றார் சிவா.
இதையும் படியுங்க : செந்தில் – ராஜலக்ஷ்மியாலயே ஏர் புடிக்க முடியாலயாம்.! இதெல்லாம் ஓவரா இல்ல.! விடீயோவ பாருங்க.!
இருவரும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருந்தாலும் அதில் இருவருக்குமான காட்சிகள் குறைவு. இந்தப் படத்தில் படம் முழுக்க இரண்டு பேரும் வருவார்கள். நான் இயக்கிய ’சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸாக உருவாக்கி னால் எப்படி யிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர். லோக்கல்’. ’எஸ்.எம்.எஸ் 2.0’ என்றும் சொல்லலாம். ஆனால் கதை வேறு வேறு என்று கூறியுள்ளார் ராஜேஷ்.
லோக்கல் பையன் என்பதை மரியாதையாகச் சொன்னால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. அதுதான் டைட்டில். நயன்தாராவுடன் தம்பி ராமையா படம் முழுவதும் வருவார். அதோடு நிறைய காமெடியன்கள் இருக்கிறார்கள். ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவோடு பணிபுரிந்திருக்கிறேன். இப்போது அவர் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பதற்கு அவரது கடின உழைப்புதான் காரணம்’’ என்றார். |