கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்கள். அதற்கு முன்னால் மேடை கலைஞராக இருந்த இவர்கள் தற்போது சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து வருகின்றனர்.
செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் தலைப்பை வென்றதும் அவருக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், இவர் ‘கரிகாலன்’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்க : பிரச்சாரத்தில் அஜித்தின் பெயரை பயன்படுத்திய தினகரன்.! என்ன செஞ்சார்னு பாருங்க.!
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தம்பதிகள் பங்கு பெற்றாலும் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஜோடி என்றால் அது செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தான். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஏரி பிடித்து நிலத்தை உழும் போட்டி ஒன்றை வைத்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியினர் ஏதோ வெளிநாட்டில் பிறந்தவர்கள் போல ஏறி படுத்து உழுவதற்கு அதனை கஷ்டப்பட்டு உள்ளனர்.