வாழ்ந்த வீட்டையும், எல்லா பணத்தையும் இழந்த போது கார் சாவியை அவர் டிரைவரிடம் கொடுத்து சாவித்ரி சொன்ன விஷயம் – ராஜேஷ் பகிர்ந்த கதை.

0
461
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜேஷ். இவர் 1949ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவர் கிறிஸ்துவத்தை பாலோ செய்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்வார்ட்ஸ் வில்லியம்ஸ். இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் பியூசி முடித்துவிட்டு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் டிகிரி படிக்க சென்றார்.ஆனால், அங்கு அவரது டிகிரியை முடிக்க முடியவில்லை. அதன்பின்னர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசியரியராக வேலை செய்து வந்தார்.

-விளம்பரம்-

பின் தனது 24 வயதில் 1979 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை என்னும் படத்தில் சின்ன ரோலில் நடித்து அறிமுகம் ஆனார் ராஜேஷ். அதன்பின்னர் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 150 படங்களுக்கு மேல் நடித்தார். அதிலும் தமிழில் இவர் கன்னி பருவத்திலே, பில்லா, அந்த ஏழு நாட்கள், தனிக்காட்டு ராஜா, பயணங்கள் முடிவதில்லை, தாய் வீடு, ஆலய தீபம், ஜெய் ஹிந்த் என பல ஹிட் படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதியின் தர்மதுறை படத்தில் டாக்டராக ராஜேஷ் நடித்தார். அதற்கு பின் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

- Advertisement -

அதோடு இவர் தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் பிஸ்னஸ் செய்து வருகிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார்.கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த தொடரில் கதாநாயகி தீபாவிற்கு அப்பாவாக ராஜேஷ் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ராஜேஷ் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் சாவித்திரி குறித்து கூறியிருந்தது, நான் அந்த 7 நாட்கள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு அருகே சாவித்திரி அம்மாவினுடைய வீடு இருந்தது. உடனே நான் அவரைப் பார்க்க சென்றேன். அப்போது வீட்டின் வேலைக்காரி ஜெமினி சாரிடம் போன் செய்து பேசினார். பிறகு ஜெமினி சார் உள்ளே செல்ல அனுமதி தந்தார். அங்கு சாவித்திரியின் மகன் இருந்தார்.

-விளம்பரம்-

அவருக்கு ஒரு 13 வயது இருக்கும். என்னை அவர் சோகமாக தான் பார்த்தார். உள்ளே சென்று நான் சாவித்திரி அம்மாவை பார்த்தேன். என் வாழ்வில் அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்ததே இல்லை. அதை என்னால் வார்த்தைகளால் சொல்லவும் முடியாது. ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து இது யார் என்று கண்டுபிடிக்க சொன்னால் கூட யாராலும் அது சாவித்திரி அம்மா என்று கண்டுபிடிக்க முடியாது அந்த நிலைமையில் அவர் இருந்தார். அப்பதான் எனக்கு, இவர் ஜெமினியை காதலிக்கவே கூடாது என்று எண்ணம் வந்தது.

அவ்வளவு தர்மங்கள் சாவித்திரி அம்மா செய்திருந்தார். அவருடைய பணம், வீடு எல்லாம் போய் வீட்டுக்கு வெளியே வந்தார். அவருடைய டிரைவரிடம் கார் சாவையையும், காருக்கான அவர்களையும் கொடுத்து இதை வைத்து பிழைத்துக் கொள் என்று கூறி விட்டு சென்று விட்டார். அவருக்காக இந்த நிலைமை என்ன நினைக்கும் போது என் கண்கள் தானாகவே கலங்கிவிடும் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

Advertisement