அம்பானி குடும்பத்தின் கலாச்சார மைய கட்டிடத்தை திறந்து வைத்த ரஜினி – வைரலாகும் புகைப்படம்.

0
400
- Advertisement -

அம்பானி வீட்டு கட்டிடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறந்து வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கோலிவுட்டில் இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

ரஜினி நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

ரஜினி நடிக்கும் படங்கள் குறித்த தகவல்:

-விளம்பரம்-

விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு படத்தில், டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்புகள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படி தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி பிஸியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

அம்பானி வீட்டு கட்டிடம்:

இந்த நிலையில் அம்பானி வீட்டு கட்டிடத்தை ரஜினிகாந்த் திறந்து வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மும்பைக்கு சென்றிருக்கிறார். அங்கு அம்பானியின் மனைவி நிதா அம்பானி அவர்கள் மும்பையில் கலாச்சாரம் மைய கட்டிடம் ஒன்றை கட்டியிருக்கிறார். இதை தான் நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து இருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் அவருடைய இளைய மகள் சௌந்தர்யாவும் கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாக இருக்கிறது. அதோடு, இந்த புகைப்படத்தை டீவ்ட்டரில் பகிர்ந்த சௌந்தர்யா, அப்பாவுடன் மும்பையில் நிதா அம்பானி ஆண்டியின் culture கட்டிடத்தை திறந்து வைத்ததில் சந்தோஷம். நியூ லுக் செம தலைவா! என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement