முதல் பேரன் பிறந்த போது இருந்த குறையை இரண்டாம் பேரன் மூலம் தீர்த்துக்கொண்ட ரஜினி – என்ன தெரியுமா ?

0
842
rajini
- Advertisement -

ரஜினி மகள் சௌந்தர்யாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருக்கிறது. பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். சமீபத்தில் தான் ஐஸ்வர்யா-தனுஷ் பிரிய போவதாக அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

-விளம்பரம்-

இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குனராக திகழ்கிறார். பின் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா முழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பின் சவுந்தர்யா தன்னுடைய மகனைப் பெற்றெடுப்பதற்காக அம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.

- Advertisement -

சௌந்தர்யாவின் முதல் குழந்தை :

சில நாட்களிலில் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு வேத் என்று பெயர் வைத்தார்கள். ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். மேலும், சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள்.

சௌந்தர்யா இரண்டாம் திருமணம் :

மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சௌந்தர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் ‘ கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இன்ப அதிர்ச்சி கொடுத்த மகள் :

கடந்த ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிக்கு அவர் சென்னை திரும்பிய பிறகுதான் இந்த சந்தோஷச் செய்தியைச் சொல்லியிருக்கிறார் அன்பு மகள் செளந்தர்யா. பிரசவத்துக்கு நெருங்கிய வேளையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாகனின் இல்லத்தில் வைத்து சௌந்தர்யாவுக்கு வளைகாப்பு நடந்தது. ரஜினி மற்றும் விசாகன் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரஜினியின் ஆசை :

அதே போல தன் மகளுக்குத் தன் வீட்டில் வளைகாப்பு நடத்திப் பார்க்க வேண்டுமென ரஜினி விரும்பியதாகச் சொல்கிறார்கள். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ரஜினி வீட்டிலும் சௌந்தர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி படு சிம்ப்ளிளாக நடைபெற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சுஹாசினி, மீனா உள்ளிட்ட ரஜினிக்கு நெருக்கமான ஒரு சிலர் கலந்து கொண்டனராம். சௌதர்யாவின் முதல் கர்ப காலத்தில் வளைகாப்பு நடத்தாத குறையை தற்போது தன் இரண்டாம் பேரன் மூலம் தீர்த்துவைத்து கொண்டுள்ளார் ரஜினி.

Advertisement