தமிழகத்தின் முதல் சபாநாயகர் இவர் தான்! அவர் என்ன செஞ்சாரு தெரியுமா?

0
1175
- Advertisement -

தமிழகத்தின் முதல் சபாநாயகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும், மாமன்னன் படம் ஜாதியைப் பற்றி பேசி இருக்குமோ? என்றெல்லாம் பலரும் விவாதித்து இருந்தார்கள். ஆனால், அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கை கதையை தான் படத்தில் காட்டி இருக்கிறார்கள் என்ற கருத்து தற்போது தொடங்கி இருக்கிறது. அதோடு பலரும் தமிழகத்தின் முதல் தலித் சபாநாயகர் தனபால் என்று பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையிலேயே தமிழகத்தின் முதல் தலித் சபாநாயகர் வேறு ஒருவர் இருக்கிறார்.

ராஜாஜி திட்டம்:

அவரைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதாவது, 1953 ஆம் ஆண்டு நாளுக்கு 3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம். மற்ற நேரங்களில் பெற்றோர்களின் தொழில்களை பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு பெண் பிள்ளைகள் தாயாரோடு வீட்டு வேலைகளையும், ஆண் பிள்ளைகள் தந்தையின் தொழிலையும் செய்ய வேண்டும் என்று ராஜாஜி திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், இந்த திட்டம் குலக்கல்வி என்று பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். இதனால் தேர்தல் வைத்து இருந்தார்கள். அதில் 137-137 சமநிலை ஏற்பட்டது. பின் தமிழ்நாட்டின் எதிர்கால கல்வியை நிர்ணயம் செய்யும் அந்த ஒற்றை வாக்கினை நபர் ஒருவர் பதிவு செய்திருந்தார்.

-விளம்பரம்-

முதல் சபாநாயகர்:

அந்த ஒற்றை வாக்கு தான் குலக்கல்வி திட்டத்தை கிடப்பில் போட வைத்தது. அந்த ஒற்றை வாக்கினை செலுத்தியவர் சிவசண்முகம் பிள்ளை. இவர்தான் தமிழகத்தின் பட்டியல் சமூகத்தின் முதல் சபாநாயகர். இவர் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். மகாத்மா காந்தியின் தீவிர சீடர். சென்னை பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். பின் இவர் தன்னுடைய படிப்பினை முடித்து 31 வயதிலேயே மாநகராட்சி உறுப்பினரார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் மூலம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் செய்த சாதனை:

இதனால் மாநகராட்சியின் முதல் தலித் மேயர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து காந்தி அவர்கள், நீங்கள் மேயப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது அன்பான வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.இதனை எடுத்து 1951 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் சிவ சண்முகம் பிள்ளை வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் சட்டமன்ற அவை தலைவர் என்று அடையாளத்தையும் அவர் பெற்றார். 1951 ஆம் ஆண்டு முதல் 1955 வரை சிறந்த சபாநாயகராக செயல்பட்டார். 1955 முதல் 1961 ஆம் வரை மத்திய பணி ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றி இருந்தார். 1962 ல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அரசியல் செயல்பாடு மட்டுமில்லாமல் வரலாற்று சிறப்புகள் எழுத்து பணியிலும்
இவர் ஆர்வத்தை செலுத்தி இருந்தார்

Advertisement