தியேட்டரில் ‘நாம் தமிழர்’ கட்சியினர் செய்த செயல்..! பதிலடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்..! நடந்தது இதுதான்

0
1333

சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா ‘ படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியான இந்த படத்தில் ரஜினியின் நடிப்பும், இயக்குனர் ரஞ்சித் எடுத்துள்ள கதைக்களமும் சிறப்பாக உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

kaala

ரஜினி படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் தான், அதுவும் முதல் நாள் முதல் ஷோ என்றால் அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்துதான்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவில் நாம் தமிழர் கட்சியின் சில தொண்டர்கள் திரையரங்கில் படம் பார்க்கும் போது மோசமாக நடந்து கொண்டனர் என்று திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

kala

இந்த சம்பவம் குறித்து திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி என்னவெனில்”ஒரு கும்பல் (நாம் தமிழர் கட்சியினர் ) திரையரங்கினுள் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ரஜினி பேசும் அணைத்து வசனத்தையும் மோசமாக விமர்சித்தனர். பின்னர் இடைவேளையின் போது ரஜினி ரசிகர்களால் அவர்கள் நன்றாக கவனிக்கப்பட்டனர் ” என்று பதிவிட்டுள்ளார்.