பர்ஸ்ட் லுக் போஸ்டர விடுங்க. அதவிட செகன்ட் லுக் போஸ்டரில் செம மாஸான விஷயம் இருக்கு.

0
41049
thalapthy64
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும், வசூலையும் அள்ளி தந்து உள்ளது. இதனையடுத்து மாநகரம், கைதி படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து “தளபதி 64” படத்தை இயக்கி வருகிறார். விஜய் அவர்கள் நடிக்கும் “தளபதி 64” படத்தின் பெயர் குறித்து இன்னும் அதிகார பூர்வகமாக எந்த தகவலும் வரவில்லை. மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for vijay 64 first look

- Advertisement -

இந்நிலையில் தற்போது விஜய் அவர்கள் விடுப்பில் இருக்கிறார். மேலும், தளபதி விஜய் அவர்கள் ஜனவரி 1வது வாரம் தொடங்கி 3வது வாரம் வரை சென்னையின் பிரபல ஸ்டுடியோவில் நடைபெறும் இந்த படத்தின் பட்டபிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இப்பட த்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதோடு இந்த படத்தின் செக்கண்ட் லுக் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், இந்த செக்கண்ட் லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : அழக்கூடாது என்று முயற்சித்தேன். ஆனால், முடியவில்லை. பார்த்திபனின் சோகமான பக்கம்.

இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்கள். அதோடு விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் கசிந்து கொண்டே தான் வருகின்றன. இதனைத்தொடர்ந்து விஜய் அவர்கள் இந்த படத்தில் பேராசிரியராக நடித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கதை தமிழகத்தை உலுக்கிய நீட் தேர்வை வைத்து இருப்பதாகவும், நீட் தேர்வினால் பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராக உள்ளதாகவும் இணையங்களில் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Related image

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து டெல்லியில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு, மூன்றாவது கட்ட படப்பிடிப்பு எல்லாம் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போது ஆந்திராவில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளி வந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் “தளபதி 64” என்று சமூக வலைத்தளங்களில் ஹாஸ்டேக் ஒன்றை உருவாக்கி அதில் இந்த படம் குறித்து பல தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement