திடீர் திருமணம் – வீடியோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அழகு சீரியல் இளம் நடிகை.

0
3162
sahana
- Advertisement -

அழகு சீரியல் நடிகை சஹானா தனது திருமண வீடியோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதிலும் சன் தொலைக்காட்சி தான் சீரியல்களின் அரசனாக இருந்து வருகிறது. தொலைக்காட்சி சீரியல்கள் பொறுத்த வரை சன் டிவி தான் இல்லத் தரசிகளின் ஒரே சாய்ஸ்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-2.jpg

அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த ‘அழகு’ சீரியல் இல்லத் தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உல்ட்டா பலர் நடித்தனர். இந்த தொடரில் ரேவதியின் மகளாக நடித்து வந்தார் சஹானா. ஆனால், இவர் பாதியில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

- Advertisement -

இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த சீரியலில் முதலில் இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிக்க உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டார்கள்.உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னார்கள்.ஆனால், எபிசோடுகள் செல்ல செல்ல என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி தோன்றியதால் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : பையன்னா ‘A’ பொண்ணுன்னா ‘S’ ல ஆரம்பிக்கற பேர வைக்கலாம்னு யோசிச்சோம் – சீரியல் நடிகை ஸ்ரீதேவி மகளின் பெயர் என்ன தெரியுமா ?

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆண் ஒருவருடன் படு நெருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார் சஹானா. மேலும், அந்த வீடியோவில் இவர் தான் எனது காதலர் அபிஷேக் என அறிமுகம் செய்து வைத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவருடன் திடீர் திருமணத்தை முடித்துள்ளார் சஹானா. சமீபத்தில் திருமண வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement