ஜெயிலர் திரையரங்கில் விரட்டி விரட்டி விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள் -காரணம் இது தான்

0
1880
Jailer
- Advertisement -

ஜெயிலர் படம் திரையரங்கில் விஜய் ரசிகரை விரட்டி விரட்டி ரஜினி ரசிகர்கள் அடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை:

மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதில் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அதோடு இந்த பாடல் வரிகள் மட்டும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தார்கள். பின் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.

விஜய்-ரஜினி ரசிகர்கள் சர்ச்சை:

அப்போதே இது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பின் ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். அதேபோல் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் விஜய் குறித்து பேசியது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் பனிப்போர் நடந்திருக்கிறது. இதில் யார் காக்கா, யார் கழுகு என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம் குறித்த விமர்சனம்:

பின் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி பேச ஆரம்பித்து விட்டார்கள். மேலும், பல சர்ச்சைகளுக்கு பிறகு இன்று ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மொத்தத்தில் ஜெயிலர் ரஜினி ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்பிற்கு கிடைத்த விருந்து என்று கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்கள் செய்த வேலை:

இந்த நிலையில் விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் ஜெயிலர் படம் வெளியாகிறது. அப்போது ரசிகர் ஒருவர், விஜய் வாழ்க! என்று முழக்கம் செய்து இருக்கிறார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை விரட்டி விரட்டி தாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இதை எடுத்து விஜய் ரசிகர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்று தெரியவில்லை.

Advertisement