‘எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை’ – சித்திக்கின் இறப்பு குறித்து ரமேஷ் கண்ணா உருக்கம்.

0
1755
Rameshkanna
- Advertisement -

மறைந்த இயக்குனர் சித்திக் குறித்து பிரெண்ட்ஸ் பட நடிகர் ரமேஷ் கண்ணா அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மலையாள சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் சித்திக். இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இயக்குனராக இருந்த பகத் பாசில் என்பவருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார். அதன் பின்பு தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், திரைக்கதை, எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக அவஸ்தைப்பட்டு இருந்தார். இதனால் இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தாலும், இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். இந்த தகவலை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சித்திக் மரணம்:

மேலும், திரை உலகை சேர்ந்த பலரும் சித்திக் உடன் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறியது, சித்திக் சார் இயக்கத்தில் நான் பிரெண்ட்ஸ் படத்தில் தான் முதலில் நடித்தேன். அதற்கு முன்னாடியே அவரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருந்தேன். எனக்கு மிகப் பெரியதாக திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது பிரெண்ட்ஸ் தான். இன்று வரை நான் குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக இருப்பதற்கு அந்த படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

ரமேஷ் கண்ணா அளித்த பேட்டி:

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற படங்களை தான் நகைச்சுவை படங்கள் என்று சொல்வார்கள். ஆனால், பிரண்ட்ஸ் படம் வந்த பிறகு அதைப் பற்றி தான் பரவலாக பேசி இருந்தார்கள். மலையாள பிரண்ட்ஸ் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான சீனிவாசன் சார் நடித்திருந்தார். அதே மாதிரி தான் தமிழில் என்னை நண்பனாக நடிக்க வைத்தார்.

-விளம்பரம்-

சித்திக் குறித்த தகவல்:

மேலும், சித்திக் சார் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் வேலை செய்வார். ஸ்பாட்டில் சிரித்த முகமாகவே வேலை செய்வது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. ஆனால், சித்திக் சார் சிரிச்ச முகமாகத்தான் இருப்பார். இன்னைக்கு காம்பினேஷனில் உள்ள நடிகர்கள் எனக்கு சாயந்திரம் 4:00 மணிக்கு வேலை இருக்கு என்னை அனுப்பி விடுங்கள் என்று கேட்டாலே கோபப்பட மாட்டார். அந்த நடிகர் போசனை மதியமே ஒரு மணிக்கே முடித்துவிட்டு அவரை அனுப்பிவிடுவார். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை.

சித்திக் இழப்பு குறித்து சொன்னது:

பிரண்ட்ஸ் படத்திலிருந்து எங்கள் இருவருக்கும் நல்ல நட்பாகிவிட்டது. அவர் தமிழில் பண்ண பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு நான்தான் டயலாக் ரைட்டர். அதன் பிறகு நாங்கள் இன்னும் நெருக்கமாக நட்பாகி விட்டோம். அவர் தமிழில் அடுத்த படம் பண்ணனும் என்று நான் பிரார்த்தனையும் செய்தேன். ஆனால், அவரால் பண்ண முடியவில்லை. அவர் மம்முட்டியை வைத்து ஒரு படம் பண்ற வேலைகளில் இருந்தார். அந்த படத்தை அவர் தமிழிலும் எடுத்திருப்பார். எனக்கும் அதில் வேலை செய்திருக்கிற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அவருடைய இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பாக மாறிவிட்டது என்று கண் கலங்கி கூறியிருந்தார்.

Advertisement