ரஜினி மன்றத்தின் உறுப்பினர்கள் இவளவு தான் – காட்டிக்கொடுத்த கூகிள்

0
3835
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக உள்ளே வெளியே ஆடி வந்த ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் நிலைப்பட்டை அறிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்த்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

-விளம்பரம்-

rajini kanthஇதனால் பல தரப்பில் இருந்து கண்டனக்குரல்களும் வரவேற்புகளும் வந்துள்ளது. தற்போது தமிழக மீடியாக்களின் பொழுது சாய்ந்தால் நடக்கும் டிபேட்டுகள் ரஜினியின் அரசியல் குறித்து தான். இந்நிலையில் தமிழத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களையும் ஒன்றிணைக்க rajinimandram.org என ஒரு இணையதளத்தை துவங்கினார் ரஜினிகாந்த்.

- Advertisement -

மேலும் இதற்கென ஒரு ஆன்ட்ராய்ட் அப்ளிகேசனையும் அறிமுகம் செய்தார். இந்த அப்ளிகேசன் அறிமுகம் செய்த நாட்களில் இருந்து தற்போது வரை பல லட்சம் பேர் டவுண்லோட் செய்துள்ளனர் என பல செய்திகள் வந்தது.

இதையும் படிக்கலாமே:
விஜய் 62 போட்டோஷுட் படங்கள் லீக் ஆனாது – புகைப்படங்கள் உள்ளே

-விளம்பரம்-

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் தற்போதுவரை 50,000 – 1,00,000 டவுன்லோட் மட்டுமே ஆகியுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 3500 நபர்கள் அந்த அப்ளிகேசனுக்கு ரிவ்யூ கொடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையாக 2000+ பேர் 5 ஸ்டார்களும், 500+ பேர் மூன்றுக்கும் குறைவான ஸ்டார்களும் கொடுத்துள்ளார். அதேபோல் இணைதளதிற்கு நாள் ஒன்றிற்கு 2500 (தினமும்) பேர் விசிட் செய்கின்றனர். தற்போது வரை இதுவே உண்மையான தகவல், ஆனால் பலர் இதுகுறித்து பல பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ரஜினிக்கு பல லட்சம் ரசிகர்கள் இருந்தாலும் ரஜினி மன்றத்தில் சேர பலர் தயக்கம் காட்டுவதையே இது உணர்த்துகிறது.

Advertisement