ரஜினியா கமலா யாரை இயக்க ஆசை..!ராஜமௌலியின் சாய்ஸ் யார் தெரியுமா ?

0
1317
Rajamoulirajini
- Advertisement -

பாகுபலி படத்திற்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்க வாய்த்த ஒரு இயக்குனராக மாறிவிட்டார் ராஜ மௌலி. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெயர் ஹொலிவூட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

-விளம்பரம்-

தற்போது தெலுங்கில் ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படத்தில்
ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சமுத்திரகனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

‘பாகுபலி’ படங்களுக்கு ஒரு கட்டப்பா போல் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மிரட்டும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார் ராஜமௌலி.

இந்த பேட்டியின் ராபிட் பயர் ரவுண்டில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண், ரஜினி-கமல் இருவரும் இயக்க விரும்பும் நடிகர் யார் என கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் இயக்குனர் ராஜமௌலி ரஜினியின் பெயரை கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement